Advertisment

வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்: ஒளிர்ந்த மீடியா, மெட்டல் பங்குகள்

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 ஆகியவை திங்களன்று உயர்வில் முடிவடைந்தன.

author-image
WebDesk
New Update
Share Market Highlights

NSE நிஃப்டி 50 0.13% அதிகரித்து 20,997.10 ஆகவும், BSE சென்செக்ஸ் 0.15% உயர்ந்து 69,928.53 ஆகவும் இருந்தது.

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கள்கிழமை (டிச.11) வர்த்தக அமர்வை நேர்மறையாக  முடித்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE)  நிஃப்டி 50 27.70 புள்ளிகள் அல்லது 0.13% அதிகரித்து 20,997.10 ஆகவும், மும்பை பங்குச் சந்தை
(BSE) சென்செக்ஸ் 102.93 புள்ளிகள் அல்லது 0.15% உயர்ந்து 69,928.53 ஆகவும் இருந்தது.

Advertisment

பரந்த குறியீடுகள் ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் முன்னிலையில் லாபத்துடன் நேர்மறையாக முடிந்தன. பேங்க் நிஃப்டி குறியீட்டு எண் 52.25 புள்ளிகள் அல்லது 0.06% அதிகரித்து 47,314.25-ல் முடிந்தது.
மீடியா மற்றும் மெட்டல் பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன, அதே நேரத்தில் பார்மா மற்றும் ஹெல்த்கேர் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

அல்ட்ராடெக் சிமென்ட், யுபிஎல், அதானி எண்டர்பிரைசஸ், நெஸ்லே இந்தியா மற்றும் பவர் கிரிட் கோஆபரேஷன் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
அதே நேரத்தில் டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், ஆக்சிஸ் வங்கி, சிப்லா, ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை பின்தங்கின.
இந்திய ஏற்ற இறக்கம் குறியீடு (இந்தியா VIX) 2.30% வரை முடிவடைந்தது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment