Share Market Today | Sensex | Nifty | BSE | NSE | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கள்கிழமை (நவ.6) வர்த்தகத்தை நேர்மறையாக நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 181.15 புள்ளிகள் அல்லது 0.94% உயர்ந்து 19,411.75 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 594.91 புள்ளிகள் அதிகரித்து 64,958.69 ஆகவும் இருந்தது.
ஸ்மால்கேப் பங்குகள் லாபத்தில் முன்னணியில் இருந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 301.15 புள்ளிகள் அல்லது 0.70% அதிகரித்து 43,619.40 ஆக இருந்தது.
உலோகம், பார்மா, ஹெல்த்கேர், ரியாலிட்டி மற்றும் ஆயில் & கேஸ் பங்குகள் மற்ற துறை குறியீடுகளில் ஏற்றம் கண்டன.
அதே நேரத்தில் பொதுத்துறை வங்கி மற்றும் நுகர்வோர் டூரபிள்ஸ் பங்குகள் திருத்தங்களை எதிர்கொண்டன.
என்எஸ்இ நிஃப்டி 50 இல் டிவிஸ் லேப்ஸ், ஐஷர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஆக்சிஸ் வங்கி மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை உயர்வில் முன்னணியில் இருந்தன.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், சிப்லா, டாடா மோட்டார்ஸ் மற்றும் டைட்டன் கம்பெனி ஆகியவை பின்தங்கின. ஏற்ற இறக்கம் குறியீடு (இந்தியா விக்ஸ்) 2.04% உயர்ந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“