Advertisment

உயர்வில் ஹீரோ மோட்டோகார்ப், ஆட்டம் கண்ட அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள்!

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி-50 ஆகியவை வியாழக்கிழமை (நவ.23) அமர்வை சரிவில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Share Market News Today June 27 2023

NSE நிஃப்டி 50 0.05% சரிந்து 19,802.00 ஆகவும், BSE சென்செக்ஸ் 0.01% குறைந்து 66,017.81 ஆகவும் முடிந்தது.

share-market News Today | Sensex | Nifty | Share Prices | இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமை (நவ.23) வர்த்தக அமர்வை சரிவில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 9.85 புள்ளிகள் அல்லது 0.05% சரிந்து 19,802.00-ல் முடிந்தது. மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 5.43 புள்ளிகள் அல்லது 0.01% குறைந்து 66,017.81 ஆக காணப்பட்டது.

Advertisment

ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளின் ஆதாயத்துடன், பரந்த குறியீடுகள் பெரும்பாலும் ஏற்றத்தில் காணப்பட்டது. தொடர்ந்து, வங்கி நிஃப்டி குறியீடு 127.90 புள்ளிகள் அல்லது 0.29% அதிகரித்து 43,577.50 இல் நிலைத்தது.
எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் உலோகப் பங்குகள் மற்ற துறைகளின் குறியீடுகளில் லாபம் பெற்றன. அதே நேரத்தில் பார்மா மற்றும் ஹெல்த்கேர் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, பிபிசிஎல், இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
பின்தங்கிய நிறுவனங்களில் சிப்லா, அல்ட்ரா டெக் சிமெண்ட், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், எல்டிஐ மைண்ட்ட்ரீ மற்றும் லார்சன் & டூர்போ ஆகியவை அடங்கும்.
இந்திய ஏற்ற இறக்கம் குறியீடு (இந்தியா VIX) 4.63% குறைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment