New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Share.jpg)
தேசிய பங்கு சந்தை (NSE) நிஃப்டி 50 உயர்ந்து 1.04% உயர்ந்து 20,096.60 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 1.10% உயர்ந்து 66,901.91 ஆகவும் இருந்தது.
Share Market Highlights | பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 ஆகியவை புதன்கிழமை (நவ.29) வர்த்தகத்தை உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்கு சந்தை (NSE) நிஃப்டி 50 உயர்ந்து 1.04% உயர்ந்து 20,096.60 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 1.10% உயர்ந்து 66,901.91 ஆகவும் இருந்தது.
share-market News Today | Sensex | Nifty | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமை வர்த்தக அமர்வை உயர்வில் முடித்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 206.90 புள்ளிகள் அல்லது 1.04% உயர்ந்து 20,096.60 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 727.70 புள்ளிகள் அல்லது 1.10% உயர்ந்து 66,901.91 ஆகவும் காணப்பட்டது.
பரந்த குறியீடுகள் ஸ்மால்கேப் மற்றும் லார்ஜ்கேப் பங்குகள் மூலம் ஏற்றம் பெற்றன. வங்கி நிஃப்டி குறியீடு 685.50 புள்ளிகள் அல்லது 1.56% உயர்ந்து 44,566.45 புள்ளிகளில் நிலைத்தது.
நிதிச் சேவைகள் மற்றும் ஆட்டோ பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன. அதே சமயம் ரியாலிட்டி, மீடியா மற்றும் கன்சூமர் டூரபிள்ஸ் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
ஆக்சிஸ் வங்கி, ஹியர் மோட்டோகார்ப், மஹிந்திரா & மஹிந்திரா, விப்ரோ மற்றும் எச்டிஎஃப்சி வங்கிகள் என்எஸ்இ நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், அதானி எண்டர்பிரைசஸ், ஓஎன்ஜிசி, டிவிஸ் லேப்ஸ், நெஸ்லே இந்தியா மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகியவை பின்தங்கின.
இந்திய ஏற்ற இறக்கம் குறியீடு (இந்தியா VIX) 4.37% ஆக குறைந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.