New Update
/
share-market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமை (டிச.26) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 91.95 புள்ளிகள் அல்லது 0.43% அதிகரித்து 21,441.35 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 229.84 புள்ளிகள் அல்லது 0.32% உயர்ந்து 71,336.80 ஆகவும் காணப்பட்டது.
லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளின் லாபத்துடன், பரந்த குறியீடுகள் நேர்மறையாக முடிந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 233 புள்ளிகள் அல்லது 0.49% உயர்ந்து 47,724.85-ல் முடிந்தது.
ஆயில் & கேஸ் மற்றும் ஹெல்த்கேர் பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன. அதே நேரத்தில் மீடியா மற்றும் ஐடி பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
என்எஸ்இ நிஃப்டி-50 இல் டிவிஸ் லேப்ஸ், ஹியர் மோட்டோகார்ப், என்டிபிசி, அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
அதே சமயம் பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை பின்தங்கி காணப்பட்டன.
இந்திய ஏற்ற இறக்கம் குறியீடு (இந்தியா VIX) 7.07% என முடிவடைந்தது.இன்றைய வர்த்தக முவில், என்எஸ்இ (NSE) நிஃப்டி 50 0.43% அதிகரித்து 21,441.35 ஆகவும், பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 0.32% உயர்ந்து 71,336.80 ஆகவும் முடிந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.