Advertisment

சென்செக்ஸ் 71,483: நிஃப்டி 21,456: புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்!

Share Market News Today | Sensex | Nifty | நிஃப்டி 21456 என்ற சாதனை உச்சத்தில் நிலைபெற்றது, சென்செக்ஸ் 71489க்கு மேல்; வங்கி நிஃப்டி 400 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமானது.

author-image
WebDesk
New Update
Nifty tops 18000 Sensex soars 700 pts as bulls return

என்எஸ்இ நிஃப்டி 50 1.29% உயர்ந்து 21,456.65 ஆகவும், பிஎஸ்இ சென்செக்ஸ் 969.55 புள்ளிகள் அதிகரித்து 71,483.75 ஆகவும் இருந்தது.

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வாரத்தின் கடைசி வர்த்தக அமர்வை உயர்வில் முடித்தன.
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி-50 1.29% உயர்ந்து 21,456.65 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 969.55 புள்ளிகள் உயர்ந்து 71,483.75 ஆகவும் காணப்பட்டது.

Advertisment

Today Nifty and Sensex 10 April 2023

நிஃப்டி 100 மற்றும் நிஃப்டி 200 பங்குகள் தலைமையிலான லாபத்துடன் பரந்த குறியீடுகள் உயர்ந்தன.
பேங்க் நிஃப்டி குறியீடு 411.25 புள்ளிகள் அல்லது 0.86% உயர்ந்து 48,143.55 புள்ளிகளில் நிலைத்தது.

தொடர்ந்து, ஐ.டி. மற்றும் பொதுத்துறை வங்கிப் பங்குகள் மற்ற துறைசார் குறியீடுகளில் ஏற்றம் பெற்று முறையே 4% மற்றும் 2% உயர்ந்தன.
எனினும், நிதிச் சேவைகள் மற்றும் ரியாலிட்டி பங்குகள் சரிவை சந்தித்து நிலைபெற்றன. டிசிஎஸ், எச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், எஸ்பிஐ மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

Sbi

பின்தங்கிய நிலையில் ஹெச்டிஎஃப்சி (HDFC) ஆயுள் காப்பீடு, நெஸ்லே இந்தியா, எஸ்பிஐ (SBI) ஆயுள் காப்பீட்டு நிறுவனம், பார்தி ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகியவை காணப்பட்டன.
ஏற்ற இறக்கம் குறியீடு (இந்தியா விக்ஸ்) 6.55% வரை  முடிந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment