Share Market Highlights: இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகள் திங்கள்கிழமை (அக்.23) வர்த்தக அமர்வை எதிர்மறையான நிலையில் நிறைவுசெய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 260.90 புள்ளிகள் அல்லது 1.34% சரிந்து 19,281.75 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 825.74 புள்ளிகள் குறைந்து 64,571.88 ஆகவும் இருந்தது.
பரந்த குறியீடுகள் சிவப்பு நிறத்தில் முடிவடைந்தன, ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் நஷ்டத்தில் முன்னணியில் இருந்தன.
வங்கி நிஃப்டி குறியீடு 571.85 புள்ளிகள் சரிந்து 43,151.20 புள்ளிகளில் நிலைத்தது. மற்ற துறைசார் குறியீடுகளில், மீடியா பங்குகள் 4.98% நஷ்டத்தில் முன்னணியில் இருந்தன.
அதே நேரத்தில் PSU வங்கி மற்றும் மெட்டல் பங்குகளும் தலா 3% சரிந்தன.
ஆக்டிவ் பங்குகள்
எச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50 இல் மிகவும் செயலில் உள்ள பங்குகளாகும்.
மெட்டல் பங்குகள்
திங்களன்று இன்ட்ரா டே வர்த்தகத்தின் போது நிஃப்டி மெட்டல் குறியீடு 3.08% சரிந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“