Share Market News Today | Sensex, Nifty, Share Prices Highlights: இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகள் புதன்கிழமை (அக்.18) அமர்வை எதிர்மறையாக நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 140.40 புள்ளிகள் அல்லது 0.71% சரிந்து 19,671.10 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 551.07 புள்ளிகள் குறைந்து 65,877.02 ஆகவும் இருந்தது.
வங்கி பங்குகள்
பரந்த குறியீடுகளில் மிட்கேப்ஸ் பங்குகள் முன்னணியில் பின்தங்கின. வங்கி நிஃப்டி குறியீடு 520.80 புள்ளிகள் அல்லது 1.17 குறைந்து 43,888.70 புள்ளிகளாக காணப்பட்டது.
மற்ற துறைசார் குறியீடுகளில், வங்கி, நிதிச் சேவைகள், ரியாலிட்டி மற்றும் ஐடி பங்குகள் திருத்தங்களை எதிர்கொண்டன.
அதே நேரத்தில் பார்மா மற்றும் மீடியா லாபம் சேர்த்தன. பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50-ல் மிகவும் பின்தங்கின.
சிப்லா, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா மற்றும் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளன.
எல் அண்ட் டி பங்குகள்
L&T டெக்னாலஜி நிறுவனம் நடப்பு நிதியாண்டிற்கான வருவாய் வளர்ச்சி வழிகாட்டுதலைக் குறைத்ததை அடுத்து, புதன்கிழமை இன்ட்ரா-டே வர்த்தகத்தின் போது பங்கு விலை 5.35% குறைந்து ரூ.4,366.40 ஆக இருந்தது.
ஆக்டிவ் பங்குகள்
ஹெச்.டி.எஃப்.சி வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை என்எஸ்இயில் மிகவும் செயலில் இருந்த பங்குகளாக காணப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“