share-market | இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 ஆகியவை திங்களன்று சரிவில் நிறைவடைந்தன.
இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கள்கிழமை (நவ.20) வர்த்தக அமர்வை எதிர்மறையாக நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 37.55 புள்ளிகள் அல்லது 0.19% சரிந்து 19,694.25 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 139.58 புள்ளிகள் அல்லது 0.21% குறைந்து 65,655.15 ஆகவும் காணப்பட்டது.
பரந்த குறியீடுகள் பெரும்பாலும் எதிர்மறையான பகுதியில் முடிவடைந்தன. ஆட்டோ மற்றும் மீடியா பங்குகளின் வீழ்ச்சியுடன் காணப்பட்டன.
பேங்க் நிஃப்டி குறியீடு பிளாட்டில் காணப்பட்டது. ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் மற்ற துறைகளின் குறியீடுகளில் லாபம் பெற்றன.
அதே நேரத்தில் ஆட்டோ, மீடியா மற்றும் மெட்டல் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி-50ல் டிவிஸ் லேப்ஸ், பார்தி ஏர்டெல், எச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ மற்றும் கோல் இந்தியா ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
அதானி எண்டர்பிரைசஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவை பின்தங்கின.
இந்திய ஏற்ற இறக்கம் குறியீடு (இந்தியா VIX) 2.70% வரை முடிவடைந்தது.
52 வாரத்தில் இல்லாத நஷ்டம்
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், கமிட்டட் அக்ரோ, எஸ்கேஎஸ் டெக்ஸ்டைல்ஸ், அதானி வில்மர் மற்றும் ஐஆர்எம் எனர்ஜி ஆகியவை என்எஸ்இயில் அதிக நஷ்டம் அடைந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“