Share Market News Today: இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகள் வியாழக்கிழமை (அக்.12) வர்த்தக அமர்வை எதிர்மறையான குறியீட்டில் நிறைவு செய்தது.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 17.35 புள்ளிகள் அல்லது 0.09% சரிந்து 19,794 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 64.66 புள்ளிகள் குறைந்து 66,408.39 ஆகவும் காணப்பட்டது.
ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் பரந்த குறியீடுகளில் ஏற்றம் பெற்றன. அதே நேரத்தில் நிஃப்டி 100 மற்றும் நிஃப்டி 200 சிறிதளவு சரிந்தன.
வங்கி நிஃப்டி குறியீடு 82.30 புள்ளிகள் அல்லது 0.18% அதிகரித்து 44,599.20-ல் நிலைத்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.17 ஆக உள்ளது.
தேசிய பங்குச் சந்தை
ஏசியன் ஹோட்டல்கள் (வடக்கு), ஷாலிமார் பெயிண்ட்ஸ், பிளாஸ்டிபிளெண்ட்ஸ் இந்தியா, எம்எம்டிசி, ஏஏஏ டெக்னாலஜிஸ், ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் மற்றும் டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆகியவை என்எஸ்இ-யில் லாபம் ஈட்டின.
ஐ.டி. பங்குகள் சரிவு
வியாழக்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தின் போது நிஃப்டி ஐடி குறியீடு 1.13% சரிந்தது. எச்சிஎல் டெக் மற்றும் டிசிஎஸ் முறையே 2.02% மற்றும் 1.65% இழந்தன.
ஆக்டிவ் பங்குகள்
குஜராத் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன், டிசிஎஸ், ஜொமாடோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை என்எஸ்இயில் மிகவும் ஆக்டிவ் பங்குகளாக காணப்பட்டன.
ஐசிஐசிஐ டைரக்ட் புரோக்கரேஜ் பிரச்னை
ஐசிஐசிஐ டைரக்ட் புரோக்கரேஜ் இன்று, பங்குச் சந்தையில் இணைப்புச் சிக்கல் இருப்பதால், அதன் வாடிக்கையாளர்கள் பிஎஸ்இ எக்ஸ்சேஞ்சில் வர்த்தகம் செய்வதில் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறியது. மேலும், தரகு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை NSE இல் வர்த்தகம் செய்ய அறிவுறுத்தியது.
ஊடக பங்குகள்
நிஃப்டி மீடியா இன்டெக்ஸ் இன்ட்ரா டே வர்த்தகத்தின் போது 1.94% உயர்ந்தது. நெட்வொர்க் 18 மீடியா அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் (Network18 Media & Investments) மற்றும் டிவி 18 பிராடுகாஸ்ட் (TV18 Broadcast) ஆகியவை முறையே 7.62% மற்றும் 4.49% லாபத்தை ஈட்டியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“