New Update
/
Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமை (ஏப்.3,2024) வர்த்தக அமர்வை சரிவில் முடித்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 18.65 புள்ளிகள் அல்லது 0.08% குறைந்து 22,434.65 ஆக முடிவடைகிறது. அதே நேரத்தில், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 27.09 புள்ளிகள் அல்லது 0.04% சரிந்து 73,876.82 ஆக உள்ளது.
பரந்த குறியீடுகள் ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகளின் ஆதாயத்துடன் கலப்பாக முடிவடைந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 113.55 புள்ளிகள் அல்லது 0.24% உயர்ந்து 47,624.25-ல் முடிந்தது.
பொதுத்துறை வங்கி பங்குகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன. அதே நேரத்தில் Realty மற்றும் FMCG பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
பங்குகள் நிலவரம்
ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டிசிஎஸ், பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி மற்றும் டிவிஸ் லேப்ஸ் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50 குறியீட்டில் அதிக லாபம் ஈட்டின.
அதேசமயம், நெஸ்லே இந்தியா, பஜாஜ்-ஆட்டோ, ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் ஆகியவை பின்தங்கின.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.