Advertisment

கடகடவென சரிந்த சந்தை: 5% இழந்த பொதுத்துறை வங்கி பங்குகள்!

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் திங்கள்கிழமை (பிப்.12,2024) அமர்வை எதிர்மறையாக முடித்தன.

author-image
WebDesk
New Update
Share Market News Today June 27 2023

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 0.76% சரிந்து 21,616.05 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.73% சரிந்து 71,072.49 ஆகவும் இருந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கள்கிழமை (பிப்.12,2024) வர்த்தக அமர்வை எதிர்மறையாக நிறைவு செய்தன.

Advertisment

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 166.45 புள்ளிகள் அல்லது 0.76% சரிந்து 21,616.05 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 523 புள்ளிகள் அல்லது 0.73% சரிந்து 71,072.49 ஆகவும் காணப்பட்டது.
ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகளின் வீழ்ச்சியுடன், பரந்த குறியீடுகள் வீழ்ச்சியுற்றன. வங்கி நிஃப்டி குறியீட்டு எண் 752.30 புள்ளிகள் அல்லது 1.65% குறைந்து 44,882.25 ஆக முடிந்தது.
ஐடி மற்றும் பார்மா பங்குகள் மற்ற துறை குறியீடுகளில் லாபம் பெற்றன. பொதுத்துறை வங்கிகள் மற்றும் மீடியா பங்குகள் 5% க்கு மேல் சரிந்தன.

பங்குகள் நிலவரம்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் (HCL Technologies), விப்ரோ (Wipro), டாக்டர் ரெட்டி'ஸ் லேப் (Dr Reddy's Lab), அப்பல்லோ ஹாஸ்பிட்டல் (Apollo Hospital) மற்றும் திவிஸ் லேப் (Divi's Lab) ஆகியவை நிஃப்டி 50-ல் அதிக லாபம் ஈட்டின.
ஹீரோ மோட்டோகார்ப், கோல் இந்தியா, பிபிசிஎல், ஓஎன்ஜிசி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை இன்று நிஃப்டி 50-ல் பெரும் நஷ்டம் அடைந்தன.

பாரத் ஃபோர்ஜ் பங்குகள் 10% சரிந்து ரூ.1,182.65 ஆக இருந்தது. இது குறித்து, நிறுவனத்தின் தலைவர் கல்யாணி, “Q4 மற்றும் FY25 க்கு அடுத்தபடியாக, தொழில்கள் முழுவதும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தையில் வளர்ச்சி வேகம் மிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பன்முகப்படுத்தப்பட்ட வணிகக் கலவையால் இயக்கப்படும் சந்தையை விஞ்சுவதே எங்கள் முயற்சியாக இருக்கும்“ என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nifty Sensex Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment