Advertisment

71,500-ஐ கடந்த சென்செக்ஸ்; உச்சத்தில் நிஃப்டி: சரிந்த அதானி எண்டர்பிரைசஸ்

hare Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் செவ்வாய்க்கிழமை (பிப்.13,2024) அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Share Market Highlights

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 0.59% அதிகரித்து 21,743.25 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.68% உயர்ந்து 71,555.19 ஆகவும் இருந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமை (பிப்.13,2024) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தது.

Advertisment

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 127.20 புள்ளிகள் அல்லது 0.59% அதிகரித்து 21,743.25 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 482.70 புள்ளிகள் அல்லது 0.68% உயர்ந்து 71,555.19 ஆக காணப்பட்டது.

பரந்த குறியீடுகள் ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் முன்னிலையில் லாபத்துடன் காணப்பட்டன. தொடர்ந்து, வங்கி நிஃப்டி குறியீடு 620.15 புள்ளிகள் அல்லது 1.38% உயர்ந்து 45,502.40-ல் முடிந்தது.
நிதிச் சேவைகள் மற்றும் வங்கிப் பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன. அதே சமயம் உலோகப் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

பங்குகள் நிலவரம்

கோல் இந்தியா, யுபிஎல், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
ஹிண்டால்கோ, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், எம்&எம், டாடா மோட்டார்ஸ் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் ஆகியவை நிஃப்டி 50 இல் முக்கிய பின்தங்கிய பங்குகளாகும்.

ஈஸியர் மோட்டார்ஸ் (Eicher Motors) டிசம்பர் 2022 காலாண்டில் ரூ.680.70 கோடியிலிருந்து 2023 டிசம்பரில் முடிவடைந்த காலாண்டில் அதன் முழுமையான நிகர லாபம் ரூ.913.73 கோடியாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தில் அந்நிறுவன பங்குகள் 0.85% அதிகரித்து, தேசிய பங்குச் சந்தையில், ஒரு பங்கு ரூ.3,904.90 என வர்த்தகம் செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment