Advertisment

ஆறுதல் அளித்த அதானி; ஐ.டி, மெட்டல் பங்குகள் கடும் வீழ்ச்சி

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தைகள் பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி-50 ஆகியவை திங்கள்கிழமை வர்த்தகத்தை சரிவில் நிறைவு செய்தன.

author-image
WebDesk
New Update
Share Market Highlight Nifty closes near 22000

தேசிய பங்குச் சந்தை நிஃப்டி-50 0.44% சரிந்து 22,122.05 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 0.48% சரிந்து 72,790.14 ஆகவும் இருந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கள்கிழமை (பிப்.26, 2024) வர்த்தக அமர்வை எதிர்மறையாக நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 90.65 புள்ளிகள் அல்லது 0.44% குறைந்து 22,122.05 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 352.66 புள்ளிகள் அல்லது 0.48% சரிந்து 72,790.14 ஆகவும் காணப்பட்டது.

Advertisment

மிட் கேப் மற்றும் லார்ஜ் கேப் பங்குகளின் வீழ்ச்சியுடன் பரந்த குறியீடுகள் எதிர்மறையான பகுதியில் முடிவடைந்தன. பேங்க் நிஃப்டி குறியீடு 235.25 புள்ளிகள் அல்லது 0.50% குறைந்து 46,576.50-ல் காணப்பட்டது.
எனர்ஜி மற்றும் ஆட்டோ பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன. அதே நேரத்தில் ஐடி மற்றும் மெட்டல் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

என்.எஸ்.இ சந்தையில் பங்குகள்

ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டிவிஸ் லேப்ஸ், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி-50 குறியீட்டில் அதிக நஷ்டம் அடைந்தன.
அதேநேரம், எல் அண்ட் டி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், அதானி போர்ட் மற்றும் ஈஸியர் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் ஈட்டின.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment