இன்றைய பங்கு வர்த்தகத்தில் தொடக்கம் முதலே கரடி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 700 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. நிஃப்டியை பொறுத்தமட்டில் 0.6 சதவீதம் சரிவை கண்டு 17400 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்து காணப்பட்டது.
அதன் பின்னர் வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சற்று முன்னேறி எழுச்சியுற்றது. பங்குகளை பொறுத்தமட்டில் செவ்வாய்க்கிழமை இன்ஃபோசிஸ் பங்கு விலை தேசிய பங்குச் சந்தையில் (NSE)2% சரிந்தது.
நடப்பாண்டின் (FY23) முதல் காலாண்டில் இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கான பேஅவுட்டை சுமார் 70% ஆக குறைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, பங்கு விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் சீனாவில் தயாராகி இந்தியாவில் வெளியிடப்படவிருந்த ஆப்பிள் 14 (iPhone 14) இந்தியாவில் தயாரிப்பை தொடர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது சந்தையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமையும் இறக்கத்திலேயே வணிகத்தை நிறைவு செய்தன. இந்த நிலையில் மறுதினம் இறக்கத்திலே சந்தையை தொடங்கியுள்ளன. முதலில் கரடி ஆட்டம் தென்பட்டாலும், அடுத்த சில நிமிடங்களில் காளை துள்ளி குதிக்க தொடங்கியது. ஓரளவு பங்குச் சந்தையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
இன்றைய தின வர்த்தக தொடக்கத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 200 புள்ளிகள் அல்லது 0.36% சேர்த்து 59,000 புள்ளிகளுக்கு அருகில் இருந்தது, அதே நேரத்தில் என்எஸ்இ நிஃப்டி 50 குறியீடு 70 பைண்ட்கள் அல்லது 0.41% உயர்ந்து 17,550ஐ தாண்டியது.
பேங்க் நிஃப்டி 38,500க்கு மேல் இருந்தது. இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் எச்.சி.எல் டெக் ஆகிய நிறுவனங்கள் சென்செக்ஸ் பங்குகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.
பஜாஜ் ஃபின்சர்வ் 2.8% உயர்ந்தது, டாடா ஸ்டீல் மற்றும் சன் பார்மா அதிக லாபம் ஈட்டின. மார்ஜின்களின் அழுத்தத்திற்கு மத்தியில், தகவல் தொழில்நுட்ப பெஹிமோத் இன்ஃபோசிஸ், ஐடி துறையில் உள்ள நிறுவனங்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது.
இன்ஃபோசிஸின் செயல்பாட்டு வரம்பு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 23.7% மற்றும் Q4FY22 இல் 21.5% உடன் ஒப்பிடும்போது Q1FY23 இல் 20.1% ஆகக் குறைந்தது. முன்னணி IT சேவை நிறுவனங்கள், மார்ஜின்களில் அழுத்தம் அதிகரித்து வருவதால், ஊழியர்களுக்கான மாறி பேஅவுட்டை ஒத்திவைத்துள்ளன அல்லது குறைத்துள்ளன.
இன்றைய தினம் மதியம் 12 மணி நிலவரப்படி சென்செகன்ஸ் 100.23 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 26.25 புள்ளிகளும் சரிந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தை 58673..64 எனவும் தேசிய பங்குச் சந்தை 17452.25 எனவும் வர்த்தகமாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.