இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 234.79 புள்ளிகளும், நிஃப்டி 85.65 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாக்டர் ரெட்டிஸ் லேப், இண்டஸ்இந்த் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தில் வணிகமாகின.
மறுபுறம் ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி நிறுவன பங்குகள் லாபத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தையை பொருத்தமட்டில் அதானி எண்டர்பிரைசஸ், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், பிபிசிஎல் நிறுவன பங்குகள் லாபத்திலும், அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 0.39 சதவீதமும், நிஃப்டி 0.47 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டது. எஸ்பிஐ பங்குகள் 3.44 சதவீதம், அதாவது ஒரு பங்குக்கு ரூ.20.45 உயர்ந்து ரூ.614.20 ஆக காணப்படுகிறது. அதேபோல் மும்பை பங்குச் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் 2.37 சதவீதம் வரை சரிந்தன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 61185.15 எனவும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 18202.80 எனவும் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil