மெட்டா தலைமை ஆபரேட்டிங் அதிகாரி (சிஓஓ) பதவியில் இருந்து ஷெரில் சாண்ட்பெர்க் விலகியுள்ளார். இரண்டாவது மிகப்பெரிய சமூக வலைதளத்தில் இவர் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் பதவி வகித்தார்.
தொடர்ந்து தற்போது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக மெட்டா புதிய தலைமை செயல் அதிகாரியாக ஜாவியல் ஆலிவன் என்பவரை நியமித்தது.
இவர் ஆக.1ஆம் தேதியில் இருந்து பதவியை ஏற்றுள்ளார். இந்த நிலையில் ஷெரில் சாண்ட்பெர்க் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பதவி வகிப்பார்.
பின்னர் நிறுவன குழுவில் உறுப்பினராக தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஷெரில் முதன்முதலில் நிறுவனத்தில் இருந்து பதவி விலகுவதாக அறிவித்தபோது சில சர்ச்சைகளும் எழுந்தன.
இதற்கிடையில், சாண்ட்பெர்க்கின் அறக்கட்டளையான 'லீன் இன்' உடன் ஃபேஸ்புக் ஊழியர்களின் ஈடுபாட்டை மெட்டா வழக்கறிஞர்கள் கவனித்து வருவதாகவும், அவரது சமீபத்திய புத்தகமான "ஆப்ஷன் பி"யை விளம்பரப்படுத்த உதவியதாகவும் கூறப்படுகிறது.