ரூ. 60 கோடி அபேஸ்... மும்பை தொழிலதிபருக்கு விபூதி அடித்த ஷில்பா ஷெட்டி? கணவர் மீதும் வழக்கு

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது, பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) ரூ. 60 கோடி மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது, பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது, பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) ரூ. 60 கோடி மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது, பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.

author-image
WebDesk
New Update
Shilpa Shetty, husband Raj Kundra

ரூ. 60 கோடி அபேஸ்... மும்பை தொழிலதிபருக்கு விபூதி அடித்த ஷில்பா ஷெட்டி? கணவர் மீதும் வழக்கு

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது ரூ.60 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. 

Advertisment

ஷில்பா ஷெட்டி குந்த்ரா, இந்தியத் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை, தயாரிப்பாளர், நடனக் கலைஞர் மற்றும் யோகா நிபுணர். 1993-ஆம் ஆண்டு 'பாசிகர்'என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், 40-க்கும் மேற்பட்ட இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது ரூ.60 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லோட்டஸ் கேபிடல் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் தீபக் கோத்தாரி என்பவர் இந்தப் புகாரை அளித்துள்ளார். கடந்த 2015 முதல் 2023-ம் ஆண்டு வரை இந்த மோசடி நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஷில்பா ஷெட்டி-ராஜ் குந்த்ரா, தங்கள் வணிகத்தை விரிவாக்குவதாகக் கூறி பணத்தைப் பெற்று, அதை தனிப்பட்ட செலவுகளுக்குப் பயன்படுத்தியதாக கோத்தாரி குற்றம்சாட்டியுள்ளார்.

2015-ல், ஷில்பா ஷெட்டி-ராஜ் குந்த்ரா ஆகியோர் தங்கள் 'பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட்' (Best Deal TV Pvt Ltd) என்ற நிறுவனத்திற்காக, தீபக் கோத்தாரியிடம் ரூ.75 கோடி கடன் கோரியுள்ளனர். இந்த நிறுவனம், வாழ்க்கை முறைப் பொருட்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தை இயக்கி வந்தது. ஆண்டுக்கு 12% வட்டி வழங்குவதாகவும் அவர்கள் உறுதியளித்ததாக கோத்தாரி கூறியுள்ளார். பின்னர், அவர்கள் கடனுக்குப் பதிலாக முதலீடாகப் பணத்தைக் கேட்டதாகவும், மாதாந்திர வருவாய் மற்றும் முதலீட்டுத் தொகையைத் திருப்பித் தருவதாகவும் உறுதியளித்து உள்ளனர்.

Advertisment
Advertisements

கோத்தாரியின் கூற்றுப்படி, அவர் ஏப்ரல் 2015-ல் ரூ. 31.95 கோடியும், செப்டம்பர் 2015-ல் ரூ. 28.53 கோடியும் என மொத்தம் ரூ. 60.48 கோடியை 'பெஸ்ட் டீல் டிவி' நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். பணத்தைத் திரும்பப் பெற பலமுறை முயற்சித்தும் தோல்வியடைந்ததால், ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா, "மோசடியாக" பணத்தைத் தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்தியதாக கோத்தாரி குற்றம்சாட்டினார். தற்போது, பொருளாதாரக் குற்றப்பிரிவு இந்த நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: