Advertisment

எஃப்.டிக்கு 8.10 சதவீதம் வரை வட்டி: இதைப் பாருங்க!

புதிய நிலையான வைப்பு மற்றும் ஏற்கனவே உள்ள நிலையான வைப்புகளின் புதுப்பித்தல் ஆகிய இரண்டும் திருத்தப்பட்ட விகிதங்களுக்கு உட்பட்டது. வங்கி தற்போது பொது மக்களுக்கு அதிகபட்சமாக 8.10% வட்டி வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
The Latest Fixed Deposit Interest Rates

இந்தப் புதிய வட்டி விகிதங்கள் நவம்பர் 24, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.

fixed-deposits | ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (SGB) அதன் நிலையான வைப்புத் தொகையான 2 கோடி ரூபாய்க்கு குறைவான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது.

புதிய நிலையான வைப்பு மற்றும் ஏற்கனவே உள்ள நிலையான வைப்புகளின் புதுப்பித்தல் ஆகிய இரண்டும் திருத்தப்பட்ட விகிதங்களுக்கு உட்பட்டது.

இந்த மாற்றத்திற்குப் பிறகு, வங்கி தற்போது பொது மக்களுக்கு அதிகபட்சமாக 8.10% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.60% வருமானத்தை ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்குகிறது.

இந்தப் புதிய வட்டி விகிதங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, நவம்பர் 24, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.

Advertisment

வட்டி விகிதங்கள்

வங்கி, 7 நாள்கள் முதல் 14 நாள்கள் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 3.75% வட்டி விகிதத்தையும், 15 நாள்கள் முதல் 29 நாள்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு 4.00% வருவாயையும் உறுதியளிக்கிறது.

தொடர்ந்து, 30 நாள்கள் முதல் 90 நாள்கள் வரையிலான டெபாசிட் காலத்தின் மீது 4.50% மற்றும் 91 நாள்கள் முதல் 180 நாள்கள் வரையிலான டெபாசிட்களுக்கு 5.00% வருமானம் தருவதாக உறுதியளிக்கிறது.

6 மாதங்கள் முதல் 12 மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகள் 6.50% வருமானத்தையும், 12 மாதங்கள் முதல் 24 மாதங்களில் முதிர்ச்சியடைபவை 8.10% வருமானத்தைப் பெறும்.

மேலும், 24 மாதங்கள், 1 நாள் முதல் 36 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 8.00% வருவாயை வழங்குகிறது, அதே சமயம் ஷிவாலிக் SFB 36 மாதங்கள், 1 நாள் முதல் 60 மாதங்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7.00% வருமானத்தை வழங்குகிறது.

தொடர்ந்து, 60 மாதங்கள், 1 நாள் முதல் 120 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 6.75% வருமானம் வழங்கப்படும், மேலும் 5 ஆண்டுகளுக்குள் (60 மாதங்கள்) முதிர்ச்சியடையும் வரி சேமிப்பு FDகளுக்கு 7.00% செலுத்தப்படும்.

மூத்தக் குடிமக்கள்

மூத்த குடிமக்கள் மேற்கூறிய அட்டை விகிதங்களை விட கூடுதலாக 0.5% பிரீமியத்தைப் பெறுவார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment