Advertisment

தீபாவளிக்கு முன் தங்கம் வாங்க வேண்டுமா? பொருளாதார நிபுணர்கள் பதில் இதுதான்!

Gold Price in India - கடந்த 10 நாட்களில் 24 காரட் தங்கத்தின் சில்லறை விலை 10 கிராமுக்கு ரூ.2500 உயர்ந்துள்ளது. இது வரும் நாள்களில் மேலும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Gold Silver Prices Today 02 October 2023 CHENNAI

COMEX தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 1.7% உயர்ந்தது.

Gold Price in India Trends and Prediction (October 2023): இந்தியாவில் கடந்த 10 நாள்களில் 24 காரட் தூய தங்கத்தின் சில்லறை விலை 10 கிராமுக்கு ரூ.2500 உயர்ந்துள்ளது. அக்டோபர் 9 அன்று ரூ.57,980 ஆக இருந்த 24 காரட் தங்கத்தின் விலை தற்போது ரூ.60,490 ஆக காணப்படுகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை, மேற்கு ஆசியாவில் புவி-அரசியல் பதற்றங்கள் அதிகரித்ததன் காரணமாக தங்கம் மேலும் உயர்ந்து காணப்பட்டது. அதாவது, COMEX தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 1.7% உயர்ந்தது. எனினும், தங்கம் விலை உயர்வுக்கு பல காரணிகள் பங்களிக்கின்றன.

Advertisment

அதிகரித்த தேவை: கோவிட் பெருந்தொற்றுநோய், உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் இந்தியாவில் அதிக பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவை சமீபத்திய மாதங்களில் அதிகரித்துள்ளது.
பலவீனமான ரூபாய்: சமீப மாதங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது, இதனால் உள்நாட்டு நுகர்வோருக்கு தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகமாக உள்ளது.
பண்டிகைக் கால தேவை: இந்தியாவில் வரவிருக்கும் பண்டிகைக் காலம் பொதுவாக தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவை அதிகரிக்கும் காலமாகும். ஏனென்றால், இந்தியாவில் பலர் பண்டிகைக் காலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பரிசாக வாங்குகிறார்கள்.

தீபாவளிக்கு முன் தங்கம் வாங்க வேண்டுமா?

இந்த ஆண்டு தீபாவளி மற்றும் தந்தேராஸ் பண்டிகைகளுக்கு முன்னதாக தங்கம் வாங்க இது நல்ல நேரமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அடுத்த சில மாதங்களில் தங்கத்தின் விலைகள் நிலையற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலையற்றது மற்றும் நாளுக்கு நாள் கணிசமான அளவில் மாறக்கூடியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
எனவே, முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வதற்கு முன் தங்கள் சொந்த இடர் மற்றும் முதலீட்டு இலக்குகளை கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Gold
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment