Sbi Fixed Deposit | எஸ்பிஐயில் வீ-கேர் டெபாசிட் திட்டம் மற்றும் அம்ரித் கலாஷ் டெபாசிட் திட்டம் ஆகியவை இந்த மாதம் முடிவடைகின்றன. இந்த இரண்டு எஃப்டிகளின் வட்டி விகிதங்கள் மற்றும் பிற விவரங்களை பார்க்கலாம்.
எஸ்.பி.ஐ வீகேர் திட்டம்
எஸ்.பி.ஐ மூத்தத் குடிமக்களுக்காக இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அவர்கள் தங்கள் வருமானத்தை பாதுகாப்பான எஃப்டியில் வைத்து கூடுதல் வட்டி பெறலாம்.
இந்தத் திட்டத்திற்கு தற்போது வங்கி 7.5% வட்டி விகிதம் வழங்குகிறது. 60 வயதுக்குட்பட்டவர்கள் இதில் டெபாசிட் செய்தால், அவர்களுக்கு 6.5% வட்டி கிடைக்கும்.
திட்டத்தின் குறைந்தபட்ச காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். இந்த எஃப்.டி திட்டத்தின் மீது கடன் பெறும் வசதியும் உள்ளது.
எஸ்.பி.ஐ அம்ரித் கலாஷ்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் அம்ரித் கலாஷ் வைப்புத் திட்டம் 400 நாள்கள் கால அளவு கொண்டது ஆகும். இந்தத் திட்டத்தில் 7.10 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்.
1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 6.80% வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்கள் இதில் முதலீடு செய்தால் அவர்களுக்கு 7.60% வட்டி கிடைக்கும். இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு எதிராகவும் முதலீட்டாளர் கடன் பெறலாம்.
மார்ச் 31, 2024
மேற்கூறிய இரு திட்டங்களையும், எஸ்.பி.ஐ.யின் எந்த கிளைக்கும் சென்று திறக்கலாம். இது தவிர, இன்டர்நெட் பேங்கிங் மற்றும் யோனோ ஆப் மூலமாகவும் முதலீடு செய்யலாம்.
இந்த இரண்டு திட்டங்களிலும் மார்ச் 31 வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். மேலும், இந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதியை எஸ்பிஐ கடந்த காலங்களில் ஏற்கனவே நீட்டித்துள்ளது. ஆனால் தற்போது எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“