நிதி தேவைகள் பெரும்பாலும் கடினமானவை. ஆகையால் மக்கள் கிடைக்கக்கூடிய ஒன்றை தேர்ந்தெடுக்கும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
Advertisment
அந்த வகையில், பெர்சனல் லோன் அல்லது கார் லோன் பெற்று கார் வாங்கலாம். இதில் பெர்சனல் லோன் என்பது பாதுகாப்பற்ற கடனாகும். ஆனால் கார் லோன் என்பது பாதுகாப்பான கடனாகும்.
இந்தக் கடனை வாடிக்கையாளர் திருப்பி செலுத்தும்வரை காரின் உரிமையாளராக கடன் கொடுத்த வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ காணப்படும்.
உதாரணமாக, நீங்கள் ரூ.15 லட்சம் மதிப்பிலான காரை வாங்க திட்டமிட்டு, ரூ.12 லட்சத்தை கடனாக வாங்க விரும்பினால், உங்கள் மாத சம்பளம் மற்றும் கிரெடிட் ஸ்கோருடன் உங்கள் காரின் மதிப்பையும் கடன் வழங்குபவர் கருத்தில் கொள்வார்.
எல்லாம் ஒழுங்காக இருந்தால், கடன் வழங்குபவர் உங்களுக்கு கடனை அனுமதிப்பார். மேலும் பல நிறுவனங்கள் 90 சதவீதம் வரை காருக்கு கடன் அளிக்கின்றன. அதேபோல் 100 சதவீதம் கடன் அளிக்கும் நிறுவனங்களும் காணப்படுகின்றன.
அந்த வகையில் கார் லோன் மற்றும் பர்சனல் லோன் வட்டி ஒப்பீட்டை பார்க்கலாம்.
இந்தத் தரவுகள் 20 செப்டம்பர் 2022ஆம் ஆண்டு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil