Advertisment

கிரெடிட் கார்டில் பணம் எடுக்க வேண்டுமா? இதைத் தெரிஞ்சுக்கோங்க.!

அவசரத் தேவைக்கு கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம். இது முன்பணம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு வட்டி அதிகம் விதிக்கப்படும்.

author-image
WebDesk
Oct 04, 2022 05:49 IST
Interoperable cardless cash withdrawal

பொதுவாக வாடிக்கையாளர்கள தங்களது கிரெடிட் கார்டு குறித்த ரிவார்ட்ஸ், எரிபொருள் சேமிப்பு என அறிந்திருப்பார்கள்.

ஆனால், கிரெடிட் கார்டின் குணநலன்கள் மற்றும் அது செயல்படும் விதம் அறிந்திருக்க மாட்டார்கள்.

நாம் தற்போது ஆபத்துக் காலத்தில் கிரெடிட் கார்டில் இருந்து முன்பணம் (கேஸ் அட்வான்ஸ்) பெற்றுக்கொள்ளும் வசதி குறித்து பார்க்கலாம்.

Advertisment

முன்பணம் கணக்கீடு

ஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் முன்பணம் பெறும் வசதி காணப்படும். இது கார்டுக்கு கார்டு வேறுபடும். குறிப்பாக இது 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நிர்ணயிக்கப்படும்.

அதாவது, கிரெடிட் கார்டின் பணம் திரும்பப் பெறும் வரம்பு அட்டைதாரரின் கிரெடிட் சுயவிவரம், வழங்கும் வங்கி மற்றும் அட்டை ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும்.

உதாரணமாக, உங்களது கடன் அட்டையின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் என வைத்துக்கொண்டால், நீங்கள் பணமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

மீதமுள்ள கடன் அளவை பொருட்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

முன்பணத்துக்கு வட்டி விதிப்பு

அந்த வகையில், கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதற்கு வங்கிகள் பரிவர்த்தனை கட்டணத்தை விதிக்கின்றன. இந்தக் கட்டணம் பொதுவாக திரும்பப் பெற்ற பணத் தொகையில் 2.5% முதல் 3% வரை இருக்கும்.

ஆனால் அட்டை மற்றும் வழங்கும் வங்கியைப் பொறுத்து மாறுபடலாம். எனவே, உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.1 லட்சத்தை ரொக்கமாக எடுத்தால், ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் இது மட்டும் கட்டணம் அல்ல.

அதாவது பணம் திரும்பப் பெற்ற நாளிலிருந்து வட்டி குவியத் தொடங்குகிறது. மாதத்திற்கு 3.5% வரை அதிக வட்டி விதிக்கப்படலாம்.

பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்

கிரெடிட் கார்டில் பணம் எடுத்து பயன்படுத்தும் வசதி விலையுயர்ந்த விஷயமாக உள்ளது. இதனைப் பொறுப்புடன் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

அவ்வாறு செய்யும்பட்சத்தில் இது பெரிதும் உதவும். மேலும், சரியான நேரத்தில் உங்கள் பில்லைச் செலுத்துவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். காசு இருந்தால் நிலுவைத் தொகைக்கு முன்னரே பணத்தை செலுத்துவது நல்லது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Bank News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment