/tamil-ie/media/media_files/uploads/2023/03/investment-759.jpg)
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம் ஆர்.டி திட்டத்துக்கு 9.10 சதவீதம் வட்டி வழங்குகிறது.
Recurring Deposit Account | வங்கி அல்லாத கடன் வழங்கும் நிதி நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் (SFL) டிஜிட்டல் ஆர்.டி. வைப்புத்தொகை மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
இவைகளில் ஸ்ரீராம் ஒன் ஆப் மற்றும் அதிகாரப்பூர்வ நிறுவன இணையதளம் மூலமாக ஏப்ரல் 22 திங்கள்கிழமை முதல் முதலீடு செய்யலாம்.
இந்த நிலையில், வழக்கமாக, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் தயாரிப்புகள் - நிலையான வருமானத் திட்டங்கள் அல்லது தொடர் வைப்பு (RDs) மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் (FDs) ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கிடைக்கும் என்று வங்கி அல்லாத நிதி நிறுவனம் (NBFC) ஒரு வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆர்.டி. திட்டம்
டெபாசிட் காலம் | பழைய வட்டி விகிதம் (%) | புதிய வட்டி விகிதம் (%) |
12 மாதம் முதல் 23 மாதங்கள் | 8.10% | 8.50% |
24 மாதங்கள் முதல் 35 மாதங்கள் | 8.40% | 8.75% |
36 மாதங்கள்-48 மாதங்கள் | 8.60% | 9.00% |
என்.பி.எஃப்.சி பல்வேறு காலங்களின் ஆர்.டிகளில் வெவ்வேறு வட்டி விகிதங்களை நிர்ணயித்து உள்ளது. 36 மாதங்கள் முதல் 48 மாதங்கள் வரையிலான தொடர் வைப்புத்தொகைகளில், வட்டி விகிதம் முந்தைய 8.60% க்கு எதிராக 9% ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
24 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரையிலான தொடர் வைப்புத்தொகைகளுக்கு முந்தைய 8.40% க்கு எதிராக இப்போது 8.75% வட்டி விகிதத்தை ஈர்க்கும்.
12 மாதங்கள் முதல் 23 மாதங்கள் வரையிலான காலக்கெடுவைக் கொண்ட RD களுக்கு முந்தைய 8.10%க்கு எதிராக 8.50% வட்டி விகிதம் கிடைக்கும். பெண் வைப்பாளர்களுக்கு 0.10% கூடுதல் வட்டி விகிதப் பலன் இருக்கும்.
வெளியீட்டின் படி, குறைந்தபட்ச RD தொகை மாதம் 1,000 ரூபாயாக இருக்கும்.
15 மாத ஃபிக்ஸட் டெபாசிட்
வாடிக்கையாளர்கள் 8.15% வட்டி விகிதத்தில் 15 மாத கால அவகாசத்துடன் ஸ்ரீராம் உன்னடி எஃப்டியைப் பெற முடியும். மூத்த குடிமக்கள் மற்றும் பெண் வைப்பாளர்கள் முறையே 0.50% மற்றும் 0.10% கூடுதல் பலனைப் பெறலாம்.
அதே சமயம் அனைத்து வைப்பாளர்களும் டிஜிட்டல் முறையில் அல்லது ஆன்லைன் சேனல்கள் மூலம் எஃப்டிகளைப் புதுப்பித்தால் 0.25% கூடுதல் பலனைப் பெறலாம்.
மற்ற தவணைக்காலங்களுடன் கூடிய உன்னதி எஃப்.டி-க்கள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் கிடைக்கின்றன. குறிப்பிட்ட 15 மாத FDகள் ஸ்ரீராம் ஒன் ஆப் மற்றும் அதன் இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். இந்தத் திட்டத்தில் குறைந்தப்பட்ச வைப்புத் தொகை ரூ.5 ஆயிரமாக காணப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.