ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.4 சதவீதம் ரிட்டன்; சீனியர் சிட்டிசன்கள் நோட் பண்ணுங்க!
ஸ்ரீராம் ஃபைனான்ஸின் நிலையான வைப்புத் தொகையானது, ஆண்டுக்கு 9.40% வரையிலான போட்டி வட்டி விகிதங்களை வழங்குகிறது. இது, நம்பகமான வருமான ஆதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட் | நிதிச் சேவைத் துறையில் முன்னணி நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ், மூத்த குடிமக்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிலையான வைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்களுக்கு 9.45 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதாவது, ஸ்ரீராம் ஃபைனான்ஸின் நிலையான வைப்புத் தொகையானது, ஆண்டுக்கு 9.40% வரையிலான போட்டி வட்டி விகிதங்களை வழங்குகிறது. பொதுவாக வங்கி மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 0.50% மற்றும் பெண் முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 0.10% அதிகம் வட்டி வழங்குகிறது.
Advertisment
காலம்
பொதுகுடிமக்கள்
மூத்தக் குடிமக்கள்
50 மாதங்கள்
8.91%
9.45%
42 மாதங்கள்
8.91%
9.45%
36 மாதங்கள்
8.81%
9.35%
30 மாதங்கள்
8.46%
9.00%
24 மாதங்கள்
8.26%
8.80%
18 மாதங்கள்
8.11%
8.65%
15 மாதங்கள்
8.26%
8.80%
12 மாதங்கள்
7.96%
8.50%
இந்த நிலையான வைப்புத்தொகைகள் 12 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான நெகிழ்வான தவணைக்கால விருப்பங்களை வழங்குகின்றன. இந்த நெகிழ்வுத்தன்மை மூத்த குடிமக்கள் தங்கள் நிதி திட்டமிடல் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான காலத்தை வழங்குகின்றன. மேலும், இந்த திட்டங்கள் வெவ்வேறு நிதி இலக்குகள் மற்றும் காலக்கெடுவை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி செலுத்துவதற்கு பல்வேறு தேர்வுகளை வழங்குகிறது. முதியோர்கள் தங்கள் நிதித் தேவைகளின் அடிப்படையில், மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் வட்டி வருவாயை அளிக்கிறது.
(Disclaimer: நிறுவனம் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த செய்தி எழுதப்பட்டுள்ளது. வாசகர்கள் தங்கள் நிதி ஆலோசகருடன் கலந்தாலோசித்த பின்னரே எந்தவொரு நிதி திட்டமிடலும் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.)
Advertisment
Advertisement
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“