இன்றைய காலகட்டத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்கள் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை தற்போதுவரை மாற்றவில்லை.
இதனால், வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. மேலும், கடன் தொகையை செலுத்த வேண்டுமென்றாலும் ஒரு தவணையை கூடுதலாக செலுத்தி கடனை சீக்கிரம் முடிக்க இது சரியான தருணம் எனவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில் ஸ்ரீராம் ஃபைனான்ஸின் உன்னதி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 9.10 சதவீதம் வரை வட்டி கொடுக்கப்படுகின்றன.
அதிலும் மூத்தக் குடிமக்களுக்கு வட்டி சற்று கூடுதலாக வழங்கப்படுகிறது.
ஸ்ரீராம் குழுமத்தின் துணை நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய NBFCகளில் ஒன்றாகும்.
இந்த அமைப்பு, 57,382 பணியாளர்கள் மற்றும் 2,875 கிளைகளின் நெட்வொர்க்குடன் இந்தியா முழுவதும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
“இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“