எஃப்.டி.க்கு 9.60 சதவீதம் வட்டி: இதைப் பாருங்க!

ஸ்ரீராம் உன்னதி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 9.10 சதவீதம் வரை நிறுவனம் வட்டி வழங்குகிறது. அதிலும் மூத்தக் குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கிறது.

ஸ்ரீராம் உன்னதி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 9.10 சதவீதம் வரை நிறுவனம் வட்டி வழங்குகிறது. அதிலும் மூத்தக் குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கிறது.

author-image
WebDesk
New Update
போலீசில் புகார்

ஸ்ரீராம் ஃனைான்ஸ் எஃப்டி மற்றும் ஆர்.டி முதலீடுகளுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

Shriram Finance Fixed Deposits: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை நிலையாக வைத்துள்ளது. இதனால் வங்கிகள் முதலீட்டாளர்களின் எஃப்.டி.களுக்கு நல்ல ரிட்டன் வழங்கிவருகின்றன.
குறிப்பாக ஸ்மால் வங்கிகள் 9 சதவீதம் வரை வட்டி வழங்கி வருகின்றன. அந்த வகையில், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் எஃப்டி மற்றும் ஆர்.டி முதலீடுகளுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

Advertisment

இந்த நிறு நிறுவனம் உன்னதி ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 9.10 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. அதிலும் மூத்தக் குடிமக்களுக்கு 0.50 சதவீதம் அதிக வட்டி வழங்குகிறது.
அதேபோல் ஆர்.டி. சேமிப்புகளுக்கும் 9 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த ஆர்.டி சேமிப்பு திட்டங்கள் 15 மாதங்கள், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் என கிடைக்கின்றன.

ஒரு பெரிய தொகையை கையில் வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் முன்பு, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டு விருப்பங்கள் உள்ளன.
ஆனால் சிறிய தொகையை பெரிதாக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஆர்.டி பக்க பலமாக இருக்கும். இந்த ஆர்.டி முதலீடுகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நல்ல தொகையை உருவாக்க உதவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: