அமெரிக்காவில் மூடப்பட்ட சிலிக்கான் வேலி வங்கியுடன் சில ஆசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்பில் உள்ளன. இது தொடர்பாக சமூக ஆர்வலர், முதலீட்டாளர் மற்றும் Webb-site.com இன் நிறுவனருமான டேவிட் வெப் சில ஆதாரப்பூர்வ கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, “குறைந்தது ஒரு டஜன் ஹாங்காங் நிறுவனங்கள், முக்கியமாக உயிரி தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வங்கியுடன் தொடர்பில் உள்ளன.
சீனா
ஷாங்காய் புடாங் டெவலப்மென்ட் பேங்க் கோ: அரசுக்குச் சொந்தமான சீனக் கடன் வழங்கும் இந்த நிறுவனம் சிலிக்கான் வேலி வங்கியுடன் ஆழமான தொடர்பு வைத்துள்ளது.
ஆண்டன் ஹெல்த் கோ: இந்த நிறுவனம் மார்ச் 10 ஆம் தேதி வரை தங்கள் ரொக்கம் மற்றும் நிதி சொத்துக்களில் சுமார் 5% ஐ சிலிக்கான் வேலி வங்கியில் (SVB) இல் டெபாசிட் செய்துள்ளன என்று ஷென்சென் பங்குச் சந்தைக்கு ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
ஹாங் ஹாங்
ப்ரில் பயோ-சயின்ஸ் லிமிடெட் : Brii Biosciences தனது மொத்த ரொக்கம் மற்றும் வங்கி நிலுவைகளில் 9%க்கும் குறைவாகவே வங்கியில் வைத்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
பிரோன்கஸ் ஹோல்டிங் கார்ப் : இந்நிறுவனம் சுமார் $11.8 மில்லியன் மார்ச் 10 ஆம் தேதி வரை SVB இல் டெபாசிட் செய்துள்ளது.
பைஜெனே லிமிட்: இந்த உயிரி மருந்து நிறுவனம், 3.9% சதவீதம் இருப்பு வைத்துள்ளது.
ஸாய் லேப் லிமிடெட்: டிசம்பர் 31, 2022 நிலவரப்படி அதன் மொத்த ரொக்கம் மற்றும் ரொக்கச் சமமான $1,008.5 மில்லியன்களில் SVBக்கு 2.3% இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியா
நசாரா டெக்னாலஜிஸ் லிமிடெட்: கேம் டெவலப்பர் நிறுவனம் மறைமுகமாக தொடர்புடைய இரண்டு யூனிட்கள் SVB இல் சுமார் $7.8 மில்லியன் ரொக்க நிலுவைகளை வைத்துள்ளது.
இந்த நிறுவனங்கள் தவிர சில ஜப்பானிய, ஆஸ்திரேலிய மற்றும் தென் கொரிய நிதி நிறுவனங்களும் சிலிக்கான் வேலி வங்கியில் முதலீட்டை கொண்டுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/