ரூ.1,50,000-ஐ நோக்கி வெள்ளி ராக்கெட் வேகம்! லாபம் பார்க்க ஈ.டி.எஃப். அல்லது நகைகள் எது பெஸ்ட்?

பங்குகளில் முறையான முதலீட்டுத் திட்டத்தைப் (SIP) பின்பற்றுவது போலவே, முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்த ஒவ்வொரு மாதமும் வெள்ளி ஈ.டி.எஃப் -களை வாங்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பங்குகளில் முறையான முதலீட்டுத் திட்டத்தைப் (SIP) பின்பற்றுவது போலவே, முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்த ஒவ்வொரு மாதமும் வெள்ளி ஈ.டி.எஃப் -களை வாங்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

author-image
WebDesk
New Update
gold silver Reuters

Silver investment best way to invest in silver ETFs India physical vs digital silver mutual funds silver price

சமீப காலமாகத் தங்கத்தின் மீதான மோகம் சற்றுத் தணிந்து, முதலீட்டாளர்களின் பார்வை முழுக்க வெள்ளியின் பக்கம் திரும்பியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, வெள்ளி விலை சுமார் 60% வரை உயர்ந்து, முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது!

Advertisment

தங்கம்-வெள்ளி விகிதம் (Gold/Silver Ratio) 107.21 என்ற உச்சத்தில் இருந்து தற்போது 80-க்கு அருகில் குறைந்துள்ளது. இது, சந்தையில் வெள்ளி தங்கத்தை விட வேகமாகச் செயல்திறன் காட்டுவதைக் குறிக்கிறது.

இந்த அபாரமான ஏற்றத்தால், இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு முக்கியமான கேள்வி எழுந்துள்ளது: இந்த அலைக்கு நாமும் பயணிக்க வேண்டுமானால், உண்மையான (Physical) வெள்ளியில் முதலீடு செய்வதா? அல்லது டிஜிட்டல் (Digital) வடிவத்தில் முதலீடு செய்வதா?

எதிர்காலக் கணிப்பு: ₹1,55,000 சாத்தியமா?

வெள்ளியின் இந்த அசுர வேகத்தைத் தொடர்ந்து, அதன் எதிர்கால இலக்குகள் குறித்த கணிப்புகளை வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்.

Advertisment
Advertisements

ஆமீர் மாக்தா (Aamir Makda): காமெக்ஸில் (COMEX) வெள்ளியின் உடனடி இலக்கு $49.50–50 ஆகும். இந்த அடிப்படையில், இந்தியச் சந்தையில் வெள்ளி விலை விரைவில் ₹1,50,000-ஐத் தொடும் என எதிர்பார்க்கிறார்.

பாவிக் படேல் (Bhavik Patel): காமெக்ஸில் $50 இலக்குடன், உள்நாட்டு MCX சந்தையில் விலை ₹1,52,000 முதல் ₹1,55,000 வரை உயர வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்.

அதே சமயம், இந்த விலையேற்றம் கிட்டத்தட்ட அதன் உச்சத்தை எட்டிவிட்டதாகவும், இனிமேல் தங்கம் அதிக லாபம் ஈட்டலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். எனவே, முதலீட்டாளர்கள் சற்று விழிப்புடன் இருப்பது அவசியம்.

முதலீட்டுத் தேர்வுகள்: எது சிறந்தது?

இந்திய முதலீட்டாளர்கள் வெள்ளியில் முதலீடு செய்ய மூன்று முக்கிய வழிகள் உள்ளன.

1. வெள்ளி ஈ.டி.எஃப் (Silver Exchange Traded Funds) – டிஜிட்டல் வழி

வெள்ளியில் முதலீடு செய்ய இதுவே மிகவும் எளிமையான மற்றும் திறமையான வழி என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவை ஃபண்ட் ஹவுஸ்கள் மூலம் நிர்வகிக்கப்படுவதால், 99.9% தூய்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. உண்மையான வெள்ளியைப் போலச் சேமித்து வைக்கும் (Storage) தொல்லை இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் வெள்ளி ஈ.டி.எஃப் (ETF)-களின் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் (CAGR) சுமார் 33.5% முதல் 35.5% வரை உள்ளது!

பங்குச் சந்தையில் முறையான முதலீட்டுத் திட்டத்தைப் (SIP) பின்பற்றுவது போலவே, ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை ஈ.டி.எஃப்-களில் முதலீடு செய்யலாம்.

டாப் பெர்ஃபார்மர்கள்:

மூன்று மாத அடிப்படையில், ஆதித்ய பிர்லா சில்வர் ஈ.டி.எஃப், டாடா சில்வர் ஈ.டி.எஃப், மற்றும் கோட்டக் சில்வர் ஈ.டி.எஃப் ஆகியவை சிறந்த செயல்பாடுகைளைக் கொண்டுள்ளன. ஓராண்டு அடிப்படையில், எஸ்.பி.ஐ மற்றும் ஆதித்ய பிர்லா ஈ.டி.எஃப்-கள் முன்னிலையில் உள்ளன.

2. நிறுவனப் பங்குகள் (Equity Proxies) – மறைமுக வழி

வெள்ளி விலையேற்றத்தால் லாபம் அடையக்கூடிய நிறுவனப் பங்குகளை வாங்குவது மற்றொரு வழி.

ஹிந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc - HZ): வெள்ளி விலையேற்றத்தால் அதிகப் பலன் அடையும் முக்கிய நிறுவனம் இது. வெள்ளியானது ஜிங்கின் துணைப் பொருளாக இருப்பதால், அதன் வருவாயில் 88% நேரடியாக லாபமாகிறது.
வெள்ளியின் விலையில் ஒரு அவுன்ஸுக்கு (ounce) $1 அதிகரிப்பது இந்துஸ்தான் ஜிங்க்  லாபத்தில் (EBITDA- வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனடைப்புக்கு முன் உள்ள வருமானம்) ஒரு சதவீதம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

3. உண்மையான வெள்ளி (Physical Silver)

வெள்ளி நாணயங்கள் அல்லது பார்கள் வாங்குவது பாரம்பரிய வழி. இருப்பினும், இதைச் சேமித்து வைப்பதற்கான பாதுகாப்புச் செலவு (Storage Cost), தூய்மைச் சரிபார்ப்பு (Purity Check) போன்ற நடைமுறைச் சிக்கல்கள் இதில் உள்ளன.

முடிவு என்ன?

வெள்ளியின் பிரகாசமான எதிர்காலத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள, நிபுணர்கள் வெள்ளி ஈ.டி.எஃப்-களையே பெரும்பாலான இந்திய முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரைக்கின்றனர். அதன் குறைந்த செலவு, தூய்மைக்கான உத்தரவாதம், அதிக பணப்புழக்கம் (High Liquidity) ஆகியவை இதை ஒரு சிறந்த தேர்வாக ஆக்குகின்றன.

முதலீட்டுக் குறிப்பு: அதிக லாபம் தரும் ஈக்விட்டி ப்ராக்ஸிகளான ஹிந்துஸ்தான் ஜிங்க் போன்ற பங்குகளை உங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்ப்பது குறித்தும் நீங்கள் ஆலோசிக்கலாம்.

பொறுப்புத் துறப்பு (Disclaimer): முதலீடு குறித்த நிபுணர்களின் பார்வைகள் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களே. முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் உங்கள் நிதி ஆலோசகருடன் கலந்தாலோசிப்பது அவசியம்.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: