Advertisment

ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ பயணம்: ரூ.99,999ல் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் அறிமுகம்

புதிய வாடிக்கையாளர்களுக்கான வெளியீட்டு விலை ஜனவரி 2024 இல் சற்று அதிகரிக்க கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, ஆன்லைன் முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Simple Energy

சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சமீபத்திய மின்சார இரு சக்கர வாகனம் சிம்பிள் டாட் ஒன் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிம்பிள் எனர்ஜி தனது சமீபத்திய மின்சார இரு சக்கர வாகனமான சிம்பிள் டாட் ஒன்னை ரூ.99,999க்கு பெங்களூருவில் அறிமுகப்படுத்தியது.

இதற்கிடையில், புதிய வாடிக்கையாளர்களுக்கான வெளியீட்டு விலை ஜனவரி 2024 இல் சற்று அதிகரிக்க கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, ஆன்லைன் முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன.

Advertisment

மேலும், டாட் ஒன் நிலையான பேட்டரியுடன் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. இது 151 கிமீ தூரத்தை வழங்கும். வண்டியானது, நம்ம ரெட், பிரேசன் பிளாக், கிரேஸ் ஒயிட் மற்றும் அஸூர் ப்ளூ ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கும்.

இதுமட்டுமின்றி, டாட் ஒன் 750W சார்ஜருடன் வருகிறது. அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக லைட்எக்ஸ் மற்றும் பிரேசன்எக்ஸ் வண்ண விருப்பங்களிலும் டாட் ஒன் வழங்கப்படும்.

பெங்களூருவை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் படிப்படியாக டெலிவரி தொடங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. டாட் ஒன் ஆனது 0 முதல் 40 கிமீ வேகத்தை 2.7 வினாடிகளில் அடையும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 3.7kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. சிம்பிள் டாட் ஒன்னின் மற்ற அம்சங்களில் 12-இன்ச் வீல்கள், டச்ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், சிபிஎஸ், இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 35-லிட்டர் இருக்கைக்கு கீழே சேமிப்பு ஆகியவை அடங்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment