நீங்கள் கடைசி நேரத்தில் பயணம் செய்ய திட்டமிடுவது, முக்கிய ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் போக வழிவகுக்கும். ரயில்வே இணையதளத்தில் எவ்வளவு தான் தேடினாலும் ஏமாற்றம் தான் மிஞ்சும். அவசர கால பயணத்திற்காகவே ரயிலில் தட்கல் சேவை உள்ளது. ஐஆர்சிடிசி தட்கல் சிஸ்டமில் 7 முதல் 10 சதவீத சீட் ஒதுக்கப்பட்டிருக்கும்.
குறைந்த அளவிலான சீட் காரணமாக, தட்கலில் டிக்கெட் புக் செய்திட அதிகளவிலான மக்கள் காத்திருப்பார்கள். ஒரே நேரத்தில் பலரும் புக் செய்வதால், பெரும்பாலானோருக்கு 503 Error பக்கத்தை காண நேரிடம். பின்னர், மீண்டும் பயண விவரங்களை டைப் செய்து செல்வதற்குள், தட்கல் டிக்கெட் காலியாகிவிடும். இத்தகைய சூழ்நிலையில், குறிப்பிட்ட சில டிப்ஸ்களை ஃபாலோ செய்தால் தட்கல் புக்கிங்கை விரைவாகவும், எளிதாகவும் செய்யலாம். அதனை கீழே காணுங்கள்
விவரங்களை தயாராக வைத்தல்
தட்கல் டிக்கெட் புக்கிங் டைமிங் பொறுத்தது தான். எனவே, பயணியின் பெயர், பயணிக்கும் தேதி உள்ளிட்ட தகவல்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்
மாஸ்டர் லிஸ்ட் ரெடி செய்தல்
ஐஆர்சிடிசி தளத்தில் My Profile செக்ஷனில் பயணியின் அனைத்து விவரங்களையும் பதிவிட்டு மாஸ்டர் லிஸ்ட் தயார் செய்ய வேண்டும். அதனை, அனைத்து புக்கிங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே, தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு முன்பு பயணிகள் விவரங்களை பதிவிட்டு தனியாக மாஸ்டர் லிஸ்ட் ரெடி செய்தால், அதனை புக்கிங் பிராசஸ் டைம் நேரடியாக உபயோகித்துக்கொள்ளலாம். இது, டிக்கெட் புக்கிங் நேரத்தில் மீச்சப்படுத்துகிறது.
ரயில் நிலையம் குறியீடு செக் செய்தல்
பெரும்பாலானோர் செய்யும் பொதுவான தவறாகும். நீங்கள் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு முன்பு, எந்த ரயிலை நிலையத்தில் ஏற போகிறோம், இறங்க போகிறோம் என்பதை மட்டும் நினைவில் வைத்திருக்கூடாது, முடிந்த வரை அந்த ரயில் நிலையத்தின் குறியீடுகளையும் தனியாக நோட் செய்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில், டிக்கெட் புக்கிங் பிராசஸ் ஆரம்பித்த பிறகு, ஸ்டேஷன் குறியீடு தேடினால், புக்கிங் சிரமமாகும்.
பெர்த் செலக்ட் செய்யாதீர்கள்
நீங்கள் டிக்கெட் புக் செய்கையில், உங்களிடம் பெர்த் செலக்ட் செய்ய கேட்கப்படும். நீங்கள் லோயர் பெர்த் என் கிளிக் செய்தால், டிக்கெட் கிடைக்காமல் போக அதிக வாய்ப்புள்ளது. முடிந்தவரை, பெர்த் செலக்ட் செய்யாமல் அடுத்த பிராசஸூக்கு செல்லுங்கள்.
இந்த வழிமுறைகளை பின்பற்றினால், கட்டாயம் தட்கல் டிக்கெட் எளிதாக கன்ஃபார்ம் ஆகிவிடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.