சிங்கப்பூர் – சென்னை இடையே டிரீம்லைனர் விமான சேவை எஸ்.ஐ.ஏ அறிவிப்பு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்.ஐ.ஏ) நிறுவனம், ஏர்பஸ் ஏ 330-300 விமானங்களுக்கு பதிலாக சென்னை-சிங்கப்பூர் வழித்தடத்தில் போயிங் 787-10 விமானங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

Chennai airport, Chennai airport news, Chennai airport latest news, Chennai To Singapore flight, சென்னை - சிங்கப்பூர் விமான சேவை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சென்னை - சிங்கப்பூர் டிரீம்லைனர் விமானசேவை, chennai to singapore flight fare jet airways,chennai to singapore flights today, chennai to singapore air india,chennai to singapore flight status,chennai to singapore singapore airlines, singapore airlines boing flights, Singapore Airlines To Operate B787-10

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்.ஐ.ஏ) விமான நிறுவனம் சிங்கப்பூருக்கும் சென்னைக்கும் இடையே அடுத்த ஆண்டு மே 20 முதல் போயிங் 787-10 டிரீம்லைனர் விமானங்களை  இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்.ஐ.ஏ) நிறுவனம், ஏர்பஸ் ஏ 330-300 விமானங்களுக்கு பதிலாக சென்னை-சிங்கப்பூர் வழித்தடத்தில் போயிங் 787-10 விமானங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம், இந்த புதிய தலைமுறை விமான வகையை சென்னைக்கு இயக்கும் முதல் சர்வதேச நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவமாக இருக்கும். இந்த விமான சேவை SQ529 சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 2020, மே 20 அன்று 23:15 மணிக்கு புறப்பட்டு தொடங்குகிறது.

19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இந்தியாவின் பொது மேலாளர் டேவிட் லிம் கூறுகையில், “இந்த புதிய தலைமுறை விமான சேவைகளைத் சென்னைக்கு தொடங்குவதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மகிழ்ச்சியடைகிறது. தயாரிப்பு மற்றும் சிறந்த சேவைக்கான எங்கள் உத்தரவாதத்திற்கு ஏற்ப, போயிங் 787-10 இன் வசதியும், விருது பெற்ற விமான சேவையுடன் இணைந்து இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு மேம்பட்ட பயண அனுபவத்தை வழங்கும்.” என்று கூறினார்.

இலகுரக கலப்பு பொருட்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட, 68 மீட்டர் பி 787-10 என்பது போயிங்கின் டிரீம்லைனர் விமானத்தின் மிக நீளமான வகையைச் சேர்ததாகும்.

போயிங் 787-10 டிரீம்லைனர் விமானங்களில் 337 இருக்கைகளும் இரு பிரிவுகளும் இருக்கும். வர்த்தகப் பிரிவில் 36 இருக்கைகளும் ‘எகானமி’ பிரிவில் 301 இருக்கைகளும் இருக்கும்.

புதிய விமானங்களை அறிமுகம் செய்வதன் மூலம் சிங்கப்பூருக்கும் சென்னைக்கும் இடையில் வாரந்தோறும் 13 விமானச் சேவைகள் வழங்கப்படும். தற்போது வாரத்துக்கு 10 விமானச் சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 787-10 நிறுவனங்களின் 49 வாடிக்கையாளர்களுக்கான உறுதியான ஆர்டர்களுடன் மிகப்பெரிய வாடிக்கையாளராக உள்ளது.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Singapore airlines announced to operate b787 10 dream liner flights on chennai route

Next Story
உஷாரய்யா உஷாரு! வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்யும் எஸ்.பி.ஐSBI online banking SBI net banking SBI app state bank of India
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com