Advertisment

மாதம் ரூ1000 முதலீட்டில் ரூ2 கோடி வருமானம்; இந்த முதலீட்டு திட்டம் பற்றி தெரியுமா?

மாதம் ரூ.1000 முதலீட்டில் கோடீஸ்வரர் ஆக்கும் சிறந்த முதலீட்டு திட்டம்; முழுமையான தகவல்கள் இங்கே

author-image
WebDesk
Apr 18, 2022 18:10 IST
உங்கள் பணம் ‘டபுள்’ ஆகணுமா? போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!

SIP investment gives Rs.2 crore profit on monthly Rs.1000 deposit: ’சிறுதுளி பெருவெள்ளம்’ என்பது பழமொழி. அந்த பழமொழிக்கேற்ப சிறுக சிறுக சேமித்தால் குறிப்பிட்ட ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம். இது நம்ப முடியாததாக இருக்கலாம். ஆனால் உண்மை. நீங்கள் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் முதலீடு செய்தால், அது உங்களை கோடீஸ்வரராக்கலாம். அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

இன்றைய காலகட்டத்தில், அதிகரித்து வரும் தேவைகள் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்துகின்றனர். முதலீட்டுக்கு வரம்பு, கால அவகாசம் இல்லை என்றும் கூறப்படுகிறது. நீங்கள் இன்னும் முதலீடு செய்யவில்லை என்றால், இனியும் தாமதிக்க வேண்டாம். இந்த புதிய ஆண்டில் உங்களின் எதிர்காலத் திட்டத்தைத் தொடங்குங்கள்.

உங்களால் அதிகம் சேமிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். சிறிய முதலீட்டில் பெரிய நிதியை உருவாக்கலாம். உங்களால் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 1000 ரூபாய்களை எளிதாக முதலீடு செய்ய முடிந்தால் போதும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது என்பது பலருக்கு புரியாத விஷயமாக இருக்கலாம். அல்லது அதிக முதலீடு தேவைப்படும் என ஒதுக்கலாம். ஆனால், 1000 ரூபாய் எஸ்ஐபியுடன் தொடங்கி கோடீஸ்வரராகலாம். இதற்காக, ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகள் கடந்த சில ஆண்டுகளில் 20 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளன.

இதையும் படியுங்கள்: Post Office News: இத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பு லாபம்; இந்தத் திட்டங்களை கவனித்தீர்களா?

ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாயை 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், நீங்கள் மொத்தம் ரூ.2.4 லட்சம் டெபாசிட் செய்திருப்பீர்கள். வருடாந்திர 15% வருமானத்தின் அடிப்படையில் 20 ஆண்டுகளில், உங்களுக்கு சுமார் 15 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இந்த வருமானம் ஆண்டுக்கு 20 சதவீதம் என்றால், மொத்தமாக சுமார் 31.61 லட்சம் கிடைக்கும்.

அதேநேரம், நீங்கள் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாயை 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து, அதன் மீது 20 சதவீத வருடாந்திர வருமானத்தைப் பெற்றால், முதிர்ச்சியின் போது மொத்த நிதியாக ரூ. 86.27 லட்சம் கிடைக்கும். அதேபோல, இந்தக் காலம் 30 ஆண்டுகள் என்றால், 20 சதவீத வருமானத்துடன், 2 கோடியே 33 லட்சத்து 60 ஆயிரம் உங்கள் நிதி தயாராகிவிடும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் கூட்டுத்தொகையின் பலனை முதலீட்டாளர் பெறுகிறார். மேலும், ஒவ்வொரு மாதமும் இதில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் பெரிய நிதியைப் பெறுவதற்கு இதுவே காரணம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Mutual Fund #Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment