Pension scheme: மூத்த குடிமக்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிதி நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் வழங்குவதற்காக மத்திய அரசு பல சிறப்பு ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
அடல் பென்சன் யோஜனா
அடல் பென்சன் யோஜனா (APY) என்பது அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக ஏழைகள்- பின்தங்கியவர்கள் மற்றும் அமைப்புசாராத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு உலகளாவிய சமூகப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அரசாங்கத்தால் வழங்கப்படும் திட்டமாகும்.
இந்தத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 5 வகையான ஒய்வூதிய படிநிலைகள் உள்ளன. 60 வயதுக்கு பிறகு ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை ஒய்வூதியம் கிடைக்கும்.
தேசிய ஓய்வூதிய திட்டம்
மூத்த குடிமக்களுக்கான அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து ஓய்வூதிய திட்டங்களிலும், தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
இது சந்தாதாரர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. NPS ஆனது PFRDA ஆல் கட்டுப்படுத்தப்படுகிறது, மேலும் இது குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு ஓய்வுக்குப் பின் நிதிப் பாதுகாப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
எல்ஐசி பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா
எல்ஐசி பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா என்பது 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகும், இது 10 ஆண்டுகளுக்கு உத்தரவாதமான ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. குறைந்தபட்சம் 60 வயதை எட்டிய எவரும் இந்த பாலிசியை வாங்கலாம். பாலிசி காலம் 10 ஆண்டுகள் ஆகும்.
இதில் ஆண்டுக்கு குறைந்தப்பட்சம் ரூ.12 ஆயிரமும், காலாண்டுக்கு ரூ.3 ஆயிரமும், அரையாண்டுக்கு ரூ.6 ஆயிரமும், மாதம் ரூ.1000மும் ஓய்வூதியம் பெறலாம்.
வரிஷ்தா ஓய்வூதிய பீமா யோஜனா (VPBY)
வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா என்பது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் (எல்ஐசி) வழங்கப்படும் ஒரு திட்டம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் 9 சதவீதம் வரை ஆண்டு வட்டி வழங்கப்படும்.
தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP)
தேசிய சமூக உதவித் திட்டத்தின் (NSAP) திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் NSAP வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யும் நபர்களுக்கு ₹200 முதல் Rs500 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS)
இத்திட்டத்தின் கீழ், பிபிஎல் பிரிவைச் சேர்ந்த 60-79 வயதுடைய முதியவர்களுக்கு மாதந்தோறும் ₹200 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 80 வயதை எட்டியவுடன் ஓய்வூதியம் மாதம் ₹500 ஆக உயரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“