Senior Citizens Fixed Deposits Interest Rates | வங்கிகள் பெரும்பாலும் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகைகளுக்கு வழக்கமான வட்டி விகிதங்களை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
அந்த வகையில், தற்போது 9% அல்லது அதற்கு மேல் அதிக வட்டி விகிதங்களை வழங்கும் சில சிறிய நிதி வங்கிகளைப் பார்ப்போம்.
1) உத்கர்ஷ் ஸ்மால் வங்கி
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது, மூத்த குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 4.60% முதல் 9.10% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது.
2) யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 4.50% முதல் 9.50% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது.
1001 நாட்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 9.50% ஆகும். இது, பிப்ரவரி 2, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
3) சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ்
மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலகட்டங்களுக்கு 4.50% முதல் 9.10% வரையிலான நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களை வங்கி வழங்குகிறது.
இரண்டு ஆண்டுகள் மற்றும் இரண்டு நாட்களில் முதிர்ச்சியடையும் FD களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 9.10% கிடைக்கும்.
4) ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, வழக்கமான குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்பு காலங்களுக்கு 4% முதல் 9% வரையிலான நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களை வழங்குகிறது.
. 444 நாட்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 9% கிடைக்கும். மூத்த குடிமக்கள் வழக்கமான முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் விகிதங்களுக்கு மேல் கூடுதலாக 0.50% வட்டி விகிதத்தைப் பெறுவார்கள்.
5) ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலகட்டங்களுக்கு 3.50% முதல் 9% வரையிலான நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களை வழங்குகிறது.
365 நாள்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 9% கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“