scorecardresearch

9.5 சதவீதம் வரை வட்டி.. எந்த வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்க்கு அதிக ரிட்டன்; செக் பண்ணுங்க

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு எந்த வங்கியில் அதிக வட்டி கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

HDFC Bank launches 2 special tenure fixed deposit schemes
ஹெச்டிஎஃப்சி புதிய திட்டங்கள் முறையே 35 மற்றும் 55 மாதங்கள் கொண்டவை ஆகும்.

மூத்த குடிமக்கள் மற்றும் பொது வைப்பாளர்களுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளன.
பல வங்கிகள் இப்போது மூத்த குடிமக்களுக்கு 8% வட்டி விகிதங்களை வழங்குகின்றன, சில சிறு நிதி வங்கிகள் மூத்தவர்களுக்கு 9% வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

அந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 3-7.60 சதவீதமும், ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில் பொதுமக்களுக்கு 3-7.10 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.50-7.75 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் பொதுமக்களுக்கு 3-7.10 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.50 முதல் 7.60 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகின்றன.

ஸ்மால் வங்கிகளில் யூனிட்டி ஸ்மால் வங்கி மூத்த குடிமக்களுக்கு 9.5 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. தொடர்ந்து, ஃபின்கேர் ஸ்மால் வங்கி 9.01 சதவீதமும், சூர்யாடே 8.75 சதவீதமும் வட்டி வழங்குகின்றன.
பொதுத்துறை வங்கிகளில் இந்தியன் வங்கி மூத்த குடிமக்களுக்கு 7.20 சதவீதமும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 7.75 சதவீதமும் வட்டி வழங்குகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Small finance bank fixed deposit interest rates for senior citizens

Best of Express