Fixed Deposits | ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், வாடிக்கையாளர்கள் உத்தரவாதமான வருமானத்தைப் பெறுவார்கள். கடந்த சில ஆண்டுகளில், வங்கிகளைத் தவிர, சிறு நிதி வங்கிகளும் (SFBs) ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
மேலும், எந்த ஆபத்தும் இல்லாமல் உங்கள் சேமிப்பை முதலீடு செய்து நல்ல வட்டி வருமானத்தையும் ஈட்டலாம். அந்த வகையில், 9.60 சதவிகிதம் வரை அதிகபட்ச வட்டி கிடைக்கும் 5 சிறு நிதி வங்கிகளின் பட்டியலை பார்க்கலாம்.
சூர்யோதாய் சிறு நிதி வங்கி
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 5 வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.10% வட்டி அளிக்கிறது. அதேசமயம் வங்கி தனது மூத்த குடிமக்களுக்கு அதே காலகட்டத்திற்கு அதிகபட்சமாக 9.60 சதவீத வட்டியை வழங்குகிறது.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 1001 நாள்களுக்கான FDக்கு 9% வட்டி அளிக்கிறது. அதே நேரத்தில், வங்கி தனது மூத்த குடிமக்களுக்கு அதே காலத்திற்கு அதிகபட்சமாக 9.50 சதவீத வட்டியை வழங்குகிறது.
ஃபின்கேர் சிறு நிதி வங்கி
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 1000 நாட்கள் FDக்கு அதிகபட்சமாக 8.51% வட்டி அளிக்கிறது. அதேசமயம் வங்கி தனது மூத்த குடிமக்களுக்கு அதே காலத்திற்கு 9.11 சதவீத வட்டியை வழங்குகிறது.
ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 888 நாட்கள் FDக்கு அதிகபட்சமாக 8.50% வட்டி அளிக்கிறது. அதேசமயம் வங்கி தனது மூத்த குடிமக்களுக்கு அதே காலத்திற்கு 9 சதவீத வட்டியை வழங்குகிறது.
இ.எஸ்.ஏ.எஃப் (ESAF) சிறு நிதி வங்கி
நீங்கள் FD இல் முதலீடு செய்ய நினைத்தால், ESAF சிறு நிதி வங்கி உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இங்கே, வங்கி அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு FD இல் அதிகபட்சமாக 8.50% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 9% வட்டியும் வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“