பொதுவாக நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இல்லத்தரசிகள் பிக்ஸட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்வதை அதிகம் விரும்புகிறார்கள். நிலையான வருமானம், பாதுகாப்பு, வட்டி விகிதங்கள் போன்ற காரணங்களால் வங்கிகளின் நிலையான வைப்பு தொகை ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு விருப்பமாக மாறிவிட்டது.
பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் நிலையான வைப்புத்தொகைக்கு சற்று குறைவான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஆனால் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் ஒரு வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு 7 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
உஜ்ஜிவன் சிறு நிதி வங்கி
வாடிக்கையாளர்களின் ஒரு வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு 6.5% வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7% வட்டி வழங்குகிறது.
உட்கார்ஷ் சிறு நிதி வங்கி
உட்கார்ஷ் சிறு நிதி வங்கி ஒரு வருட FD கணக்குகளுக்கு 6.5% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதம் வட்டி வழங்குகிறது.
சூர்யோதே சிறு நிதி வங்கி
சூர்யோதே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஒரு வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு 6.50% வட்டி வழங்குகிறது.
ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
இந்த வங்கியில் ஒரு வருட நிலையான வைப்பு தொகை கணக்குகளுக்கு ஆண்டுக்கு 6.5% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 7% வட்டி வழங்கப்படுகிறது.
ஜனா சிறு நிதி வங்கி
ஜனா சிறு நிதி வங்கியில் ஒரு வருட FD கணக்குகளுக்கு 6.25%, மூத்த குடிமக்கள்- 6.75% வட்டி வழங்கப்படுகிறது.
ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி
இந்த வங்கியில் ஒரு வருட ரெகுலர் FD கணக்குகளுக்கு 6.25%, மூத்த குடிமக்களுக்கு 6.75% வட்டி வழங்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil