ஒரு முதலீட்டாளர் பணத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று நிலையான வைப்புகளில் முதலீடு செய்வதாகும், இது பணத்தைச் சேமிப்பது மட்டுமல்லாமல் கணிசமான வட்டியையும் ஈட்ட உதவுகிறது.
ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
ஏ.யூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 18 மாத வைப்புகளுக்கு 8 சதவீதம் வரை அதிகப்பட்சமாக வட்டி வழங்குகிறது.
ஈஎஸ்ஏஎஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 2 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 365 நாள்கள் முதல் 1095 நாள்கள் வரையிலான டெபாசிட்களுக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
நார்த்ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 526 நாள்கள் முதல் 1111 நாள்கள் வரையிலான டெபாசிட்களுக்கு அதிகப்பட்சமாக 9 சதவீதம் வட்டி வழங்குகிறது.
சூர்யாடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 2 ஆண்டுகள் 2 நாள்கள் டெபாசிட்டுக்கு அதிகப்பட்சமாக 8.65 சதவீதம் வட்டி வழங்குகிறது.
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 12 மாத டெபாசிட்களுக்கு 8.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. அதேநேரத்தில் யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 1001 நாள்கள் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வட்டி வழங்குகிறது.
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 8.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.
ஈகுவிடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 444 நாள்கள் டெபாசிட்டுக்கு 8.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“