Advertisment

எஃப்.டி.க்கு 9 சதவீதம் வரை வட்டி: டாப் வங்கிகள் இவைதான்!

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.5 சதவீதம் வரை ரிட்டன் வழங்குகிறது. அந்த வகையில் எஃப்டி முதலீடுகளுக்கு அதிகபட்ச வட்டி வழங்கும் வங்கிகள், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
போலீசில் புகார்

தனியார் வங்கியான ஆக்ஸிஸ் 7.75 சதவீதம் வரை எஃப்.டி முதலீடுக்கு வட்டி வழங்குகின்றது.

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் (SFBs) முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக நிலையான வைப்புகளுக்கு 9 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) தொடர்ச்சியான வட்டி விகித உயர்வுகள் நிலையான வைப்புகளை (எஃப்டி) ஒரு வலுவான முதலீட்டு கருவியாக்க உதவிவருகின்றன.

Advertisment

இந்த நிலையில், யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, மூத்த குடிமக்களுக்கு அக்டோபர் 25, 2023 நிலவரப்படி 1001 நாட்களுக்கு நிலையான வைப்புத்தொகைக்கு 9.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

அதேபோல், மற்ற ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளான ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஈசாப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளும் 9 சதவீதத்துக்கு மேல் வட்டி வழங்குகின்றன.

தனியார் வங்கிகள்

ஆக்ஸிஸ் வங்கி 7.75 சதவீதம் வரையிலும், பந்தன் வங்கி 7.75 சதவீதம் வரையிலும், சிட்டி யூனியன் வங்கி 7.50 சதவீதம் வரையிலும், சிஎஸ்பி வங்கி 7.60 சதவீதம் வரையிலும், டிபிஎஸ் வங்கி 8 சதவீதம் வரையிலும், ஃபெடரல் வங்கி 7.90 சதவீதம் வரையிலும், ஹெச்டிஎஃப்சி வங்கி 7.75 சதவீதம் வரையிலும், ஐசிஐசிஐ வங்கி 7.50 சதவீதம் வரையிலும், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி 8 சதவீதம் வரையிலும், இண்டஸ்இந்த் வங்கி 8.25 சதவீதம் வரையிலும், ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி 7.60 சதவீதம் வரையிலும், கர்நாடகா வங்கி 7.65 சதவீதம் வரையிலும், கரூர் வைஸ்யா வங்கி 8 சதவீதம் வரையிலும், கோடாக் மகிந்திரா வங்கி 7.75 சதவீதம் வரையிலும், நைனிடால் வங்கி 7.55 சதவீதம் வரையிலும், ஆர்.பி.எல் வங்கி 8.30 சதவீதம் வரையிலும், எஸ்பிஎம் இந்திய வங்கி 8.25 சதவீதம் வரையிலும், சௌத் இந்தியன் வங்கி 7.50 சதவீதம் வரையிலும், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி 7.50 சதவீதம் வரையிலும் எஃப்.டி முதலீட்டுக்கு வட்டி வழங்குகின்றன.

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள்

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளை பொறுத்தமட்டில் மூத்தக் குடிமக்களுக்கு ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.50 சதவீதமும், கேப்பிட்டல் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8 சதவீதமும், ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 9 சதவீதமும், இஏஎஸ்எஃப் வங்கி 9 சதவீதமும், ஃபின்கேர் 9.11 சதவீதமும், ஜனா ஸ்மால் வங்கி 9 சதவீதமும், சூர்யாடே 9.10 சதவீதமும், உஜ்ஜிவன் 8.75 சதவீதமும், யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் 9.50 சதவீதமும், உத்கர்ஷ் 9.10 சதவீதமும் ரிட்டன் கொடுக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment