Advertisment

தினசரி ரூ.50 முதலீடு செய்து ஓய்வு காலத்தில் ரூ.1 கோடி வருமானம் பெறுங்கள்!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் SIP முறையில் முதலீடு செய்தால் குறைந்தபட்சம் 12% லாபம் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mutual funds, mutual fund tips, மியூச்சுவல் ஃபண்ட்

நீங்கள் சரியான முதலீடுகளை தேர்ந்தெடுத்தால் ஓய்வு காலத்தில் அதிக பணத்தை சம்பாதிக்கலாம். எல்லோரும் வயதாகும்போது கோடீஸ்வரராக இருக்க விரும்புகிறார்கள். ​​நீங்கள் பணக்காரராக பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். ஒரு நாளைக்கு ரூ. 50 முதலீடு செய்தால் போதும். நீங்கள் இந்த திட்டத்தில் சிறிய தொகையை முதலீடு செய்து லட்சாதிபதியாகலாம்.

Advertisment

ஒரு கோடீஸ்வரர் ஆக முதலாவதாக, முதலீட்டை இளம் வயதில் சீக்கிரம் தொடங்க வேண்டும். உலகின் அனைத்து வெற்றிகரமான நபர்களை கவனித்தால், அதில் பெரும்பாலானோர், மிக இளம் வயதிலேயே முதலீடு செய்வதற்கான தந்திரங்களைக் கற்றுக்கொண்டவர்களாக இருப்பர். வாரன் பஃபே இதற்கு மிகப்பெரிய உதாரணம். 11 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினார். அவரது முதலீடு தொடர்பான யோசனைகள் இன்று உலகம் முழுவதும் முதலீடிற்கான குரு மந்திரமாக கருதப்படுகிறது. இரண்டாவதாக, நீண்ட காலத்திற்கு பொறுமையுடன் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள்.

பரஸ்பர நிதியத்தின் SIP திட்டம்

உங்கள் பணத்தை முதலீடு செய்ய எளிதான வழி மியூச்சுவல் ஃபண்டுகளில் முறையான முதலீட்டு திட்டத்தில் (SIP) முதலீடு செய்வது. அது உத்தரவாதமான முடிவுகளை அளிக்கிறது. SIP முறையான முதலீட்டுத் திட்டம் மூலம் எப்படி ஒருவர் கோடீஸ்வரர் ஆவது என்பதை பார்க்கலாம். இது மாத மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை எனும்போது முதலீடு செய்ய வசதியாகவும் இருக்கின்றது. மேலும் மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் கூட இதில் முதலீடு செய்ய முடியும்.

உங்களுக்கு தற்போது 25 வயது என வைத்துக் கொள்வோம். உங்களது 60 வயதில் ஓய்வுபெறும்போது நீங்கள் 1 கோடி ரூபாய் வரை கார்பஸினை பெற என்ன வழி, எந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். எவ்வளவு தொகை முதலீடு செய்யலாம் என பார்க்கலாம்.

தினசரி 50 ரூபாய் முதலீடு என வைத்துக் கொண்டால் மாதத்திற்கு 1,500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். சராசரியாக 12 - 15% வருமானம் என வைத்துக் கொண்டால், 35 வருட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டியிருக்கும். வட்டி விகிதம் என்பது சராசரியாக 12.5% ஆக இருக்கும்.

எஸ்ஐபியில் மாதம் 1,500 ரூபாய் முதலீடு செய்கிறது என வைத்துக் கொள்வோம்.

மாத வருமானம் சராசரியாக - 12.5%

மொத்த முதலீட்டு காலம் - 35 வருடம்

மொத்த முதலீட்டு தொகை - ரூ.6.3 லட்சம்

மொத்த ஓய்வூதிய மதிப்பு ரூ.1.1 கோடி

இப்போது நீங்கள் 30 வயதில் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

SIP தொகை - 1500/மாதம்

மதிப்பிடப்பட்ட வருமானம் - 12.5%

முதலீட்டு காலம் - 30 ஆண்டுகள்

மொத்த முதலீடு - ரூ 5.4 லட்சம்

நிகர மதிப்பு - ரூ.59.2 லட்சம்

நீங்கள் 5 வருடங்கள் தாமதமாக முதலீடு செய்ய தொடங்கினால், உங்களுக்கு 40 லட்ச ரூபாய் இழப்பு ஏற்படும். நீங்கள் 30 வயதில் முதலீடு செய்தால், ஓய்வு பெறும் வயதில் ரூ.59.2 லட்சம் கிடைக்கும். அதே 25 வயதில் அதே தொகையை முதலீடு செய்தால் ரூ .1.1 கோடி கிடைக்கும்.

நீங்கள் 30 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக விரும்பினால், தினமும் ரூ.106 சேமிக்க வேண்டும். அதாவது மாதத்திற்கு ரூ.3200 முதலீடு செய்ய வேண்டும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1.1 கோடி சம்பாதிக்க முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mutual Fund
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment