scorecardresearch

பி.எஃப் முடக்கப்படும் அபாயம்: இந்த தேதிக்குள் ஆதாரை இணைத்து விட்டீர்களா?

இந்நிலையில் செப்டம்பர் 30-க்குள் ஆதார் எண்ணை சமர்பிக்காவிட்டால், உங்கள் சேமிப்பு கணக்கு முடக்கப்படும். சேமிப்பு கணக்கின் எல்லா செயல்பாடுகளும் முடக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

saving accounts

நீங்கள் பி.பி.எப் அல்லது தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால், குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் ஆதார் எண்ணை தபால் நிலையம் அல்லது வங்கியின் கிளையில் சமர்பிக்க வேண்டும்.

பி.பி.எப்,  என்.எஸ்.சி , வயது முதிர்ந்தோர் சேமிப்பு கணக்கு நீங்கள் தபால் நிலையத்தில் அல்லது வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்திருந்தால், இந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதிக்குள்  ஆதார் எண்ணை நீங்கள் வழங்க வேண்டும். மத்திய நிதியமைச்சகம்  ஆதார் எண்ணை பான் அட்டை முதல் வங்கி கணக்கு வரை எல்லாவற்றுடனும் லிங் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில் நாம் தொடங்கும், அல்லது நம்மிடம் உள்ள எல்லா சிறு சேமிப்பு திட்டங்களோடும், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு  கடந்த மார்ச் 31ம் தேதி வெளியாகி உள்ளது.

 “இதற்கு முன்பாக ஒருவர் சேமிப்பு கணக்கை தொடங்கி இருந்தால், 1 ஏப்ரல் முதல் 6 மாதத்திற்குள், ஆதார் எண்ணை சமர்பிக்கலாம்” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆதார் எண்ணை போல், பான் அட்டை எண்ணையும் வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 30-க்குள் சமர்பிக்காவிட்டால், உங்கள் சேமிப்பு கணக்கு முடக்கப்படும். சேமிப்பு கணக்கின் எல்லா செயல்பாடுகளும் முடக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”  

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Small saving schemes must link with aadhar account otherwise account will be freezed