சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு : இன்று முதல் அமல்!

வங்கி சேமிப்பு கணக்குகளின் வட்டிவிகிதம் மாற்றமில்லாமல் 4 சதவீதத்திலேயே தொடர் கிறது.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.4 சத வீதம் வரை உயர்த்தப்படுவதாக மத்திய அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

சிறுசேமிப்பு திட்டம்:

இந்த அறிவிப்பின் மூலம்  இந்தக் காலாண்டில் பிபிஎஃப், என்எஸ்சி உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் கூடுதல் வருமானம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டுக்கும், அரசு கடன் பத்திரங்களின் வருமானத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும் என்று 2016ல் மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்தது.

அதன்படி தற்போது அரசு கடன் பத்திரங்களின் வருமானம் உயர்ந்துள்ளதால் மத்திய நிதி அமைச்சகம் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை உயர்த்த முன்வந்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த நிதி ஆண்டின் 3-ம் காலாண் டில் ஐந்தாண்டு வைப்பு நிதி, ரெக்கரிங் டெபாசிட், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகியவற்றின் வட்டி விகிதம் 0.4 சதவீதம் உயர்த்தப்பட்டு முறையே 7.8, 7.3 மற்றும் 8.7 சதவீதமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இவைதவிர பிபிஎஃப், என்எஸ்சி, செல்வமகள் சேமிப்பு திட்டம், கிஸான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டம் ஆகியவற்றின் வட்டி விகிதமும் 0.4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய வட்டி விகிதத்தின்படி பிபிஎஃப், என்எஸ்சி இரண்டு திட்டங்களும் 8 சதவீத வட்டியும், செல்வ மகள் சேமிப்பு திட்டம் அதிகபட்சமாக 8.5 சதவீத வட்டி யும் வழங்குகிறது.

மேலும் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டு கால வைப்பு நிதி திட்டங் களின் வட்டி விகிதமும் 0.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் வங்கி சேமிப்பு கணக்குகளின் வட்டிவிகிதம் மாற்றமில்லாமல் 4 சதவீதத்திலேயே தொடர் கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close