டெல்லி நொய்டாவின் செக்டர் 51 இல் கடந்த ஆண்டு (2023) நவம்பர் 3 ஆம் தேதி ஒரு விருந்து மண்டபத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு நான்கு பாம்பாட்டிகள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இந்த ஐந்து பேர் மீதும் வனவிலங்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த பாம்பு விஷம்-ரேவ் பார்ட்டி வழக்கில் பிக் பாஸ் OTT வெற்றியாளர் எல்விஷ் யாதவ் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
பாம்பு வெனோம்-ரேவ் பார்ட்டி கும்பல் பிடிபட்டது எப்படி?
எல்விஷ் யாதவின் வீடியோக்களைப் பார்த்த பிறகு, பாஜக தலைவர் மேனகா காந்தி தலைமையிலான விலங்குகள் உரிமைக் குழுவான பிஎஃப்ஏ (பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்) புகார் அளித்தது.
முன்னதாக யாதவ்விடம் வாடிக்கையாளர் போல் பேசினர். அப்போது நொய்டா செக்டர் 51 வரும்படியும், ராகுல் என்பவரின் எண்ணையும் வழங்கியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, இவரிடம் 5 நாகப்பாம்புகள், 20 மில்லி விஷம் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில், ஜெயகரன், டிடுநாத், நாராயண் மற்றும் ரவிநாத் ஆகிய நான்கு பாம்பாட்டிகளும் கைது செய்யப்பட்டனர்.
எனினும், கடந்த காலங்களில் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட யாதவ், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
புகார்- மறுப்பு
அப்போது, “இந்தக் குற்றச்சாட்டில் 1 சதவீதம் கூட உண்மை இல்லை" என்றார். எனினும், யாதவ், சட்டவிரோதமாக பாம்பு விஷத்தை விற்பனை செய்வதில் ஈடுபட்டதாக மேனகா காந்தி குற்றம் சாட்டினார்.
இது குறித்து பேசிய மேனகா காந்தி, “ஆதாரங்களின் அடிப்படையில் அவர் தப்பிவிட்டார்; ஆனால் அவர் நிச்சயம் சிக்குவார். அவரின் கைது நிச்சயம் நடைபெறும்” என்றார். பிரபல யூ-ட்யூபர் ஆன எல்விஷ் யாதவ், நாட்டின் முதல் 10 இடங்களில் வருமானம் சம்பாதிக்கும் யூ-ட்யூபர்களுள் ஒருவராக உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி எனக் கூறப்படுகிறது.
இரண்டு யூ-ட்யூப் சேனல்கள் நடத்தும் இவரின் ஆண்டு வருமானம் 2-3 கோடிகள் ஆகும். மாதம் ரூ.40 லட்சம் வரை இவர் சம்பாதிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“