ஆக்ஸிஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்: இந்தியா போன்ற நாடுகளில் அனைத்து தரப்பு மக்களும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். உத்தரவாதமான வருமானம் மற்றும் இடர்பாடுகள் குறைவு என்பதால் முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகித அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு வங்கிகள் 2024 ஜூலை மாதம் முதல் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன. அந்த வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
பேங்க் ஆஃப் இந்தியா
ஜூன் 30, 2024 முதல், பேங்க் ஆஃப் இந்தியா மூத்த குடிமக்களுக்கு 666 நாள்களுக்கு அதிகபட்சமாக 7.8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. மற்ற வைப்புதாரர்களுக்கு அதே காலத்திற்கு 7.3 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி
ஜூலை 1, 2024 முதல், பஞ்சாப் & சிந்து வங்கி ரூ.3 கோடி வரை எஃப்டி விகிதங்களை புதுப்பித்துள்ளது. இதன்மூலம், மூத்த குடிமக்களுக்கு 666 நாள்களுக்கு அதிகபட்ச எஃப்.டி விகிதம் 7.8 சதவீதம் வழங்கப்படுகிறது. மற்ற வைப்புதாரர்கள் அதே காலத்திற்கு 7.3 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் திருத்தப்பட்ட எஃப்.டி விகிதங்கள் ஜூன் 29, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. வாடிக்கையாளர்கள் 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 7.2 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். மூத்த குடிமக்களுக்கு 15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு 7.75 சதவிகிதம் அதிக விகிதம் கிடைக்கும்.
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்ஸிஸ் புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வருகின்றன. இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 7.75 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். மற்ற வாடிக்கையாளர்களுக்கு, 17 முதல் 18 மாதங்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 7.2 சதவீதம் என்ற அதிகபட்ச விகிதம் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“