9.5 சதவீதம் வரை வட்டி: ஸ்மால் வங்கிகளின் எஃப்.டி திட்டங்களை பாருங்க!

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் நல்ல ரிட்டன் கொடுக்கின்றன. குறிப்பாக இந்த வங்கிகள் 9.5 சதவீதம் வரை வட்டியை வழங்குகின்றன.

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் நல்ல ரிட்டன் கொடுக்கின்றன. குறிப்பாக இந்த வங்கிகள் 9.5 சதவீதம் வரை வட்டியை வழங்குகின்றன.

author-image
WebDesk
New Update
Know the LIC Kanyadan Policy

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு, பொதுத்துறை வங்கிகளை காட்டிலும் ஸ்மால் வங்கிகள் அதிக வட்டி வழங்குகின்றன.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய பெரும்பாலும் ரிஸ்க்-ப்ரீ முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கியும் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் உள்ளதால், பொதுத்துறை வங்கிகளும், ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு நல்ல வட்டி வழங்குகின்றன.
அதே வேளையில் ஸ்மால் வங்கிகள் சிறப்பான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இதில் ரூ.5 லட்சம் வரையிலான முதலீடுகள் மட்டுமே ரிசர்வ் வங்கியின் காப்பீடுக்குள் வரும் என்பதையும் முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ளல் வேண்டும்.

ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

Advertisment

ஈகுடாஸ் சிறு நிதி வங்கி இளம் டெபாசிட்டாளர்களுக்கு ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 8.2% வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 9% வரை வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஃபின்கேர் சிறு நிதி வங்கி வழங்கும் சிறப்பு கால வைப்புத் திட்டங்கள், வைப்பாளர்கள் 444 நாட்களுக்கு வட்டி மூலம் 8.5% வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யும். அதிகப்பட்சமாக இந்த வங்கி 9.5 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.

ஏயூ (AU) ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஏயூ (AU) ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சுமார் 8% வட்டியை 18 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வழங்குகிறது.

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

Advertisment
Advertisements

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி 12 மாத கால வைப்புத்தொகைக்கு சுமார் 8.25% சிறந்த வட்டியை வழங்குகிறது.
80 வாரங்கள் வரை சிறப்பு எஃப்.டி (FD) திட்டங்களுக்கும் இதேபோன்ற 8.25% வட்டி கிடைக்கும். இதற்கு மாறாக, மூத்த குடிமக்கள் உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியில் ஆண்டுக்கு 8.75% வரை வட்டி விகிதங்களைப் பெறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: