Sovereign Gold Bond Scheme 2021-22 – Series X: Gold bond issue price fixed at Rs 5,109/gm; subscription opens Monday: திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு விற்பனைக்குத் திறக்கப்படும் 2021-22 ஆம் ஆண்டிற்கான அடுத்த தவணை தங்கப் பத்திரத்திற்கான வெளியீட்டு விலை, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5,109 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இறையாண்மை தங்கப் பத்திரத் திட்டம் 2021-22 இன் 10-வது தொடர் பிப்ரவரி 28 முதல் மார்ச் 4 வரையில் விற்பனைக்குத் திறக்கப்படும்.
"பத்திரத்தின் பெயரளவு மதிப்பு... ரூ. 5,109 ஆக உள்ளது" என்று ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு கிராமுக்கு ரூ. 50 தள்ளுபடி வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்ப செயல்முறை மற்றும் கட்டணம் டிஜிட்டல் முறையில் செய்யப்பட வேண்டும்.
"அத்தகைய முதலீட்டாளர்களுக்கு, தங்கப் பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராம் தங்கம் ரூ. 5,059 ஆக இருக்கும்" என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஜனவரி 10 முதல் 14 வரையிலான சந்தாக்களுக்குத் திறக்கப்பட்ட 9-வது தொடரின் வெளியீட்டு விலை ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,786.
இதையும் படியுங்கள்: உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா? அவசர தேவைக்கு இந்த 5 ‘தப்பு’கள் பாவம் இல்லைங்க!
இந்திய அரசின் சார்பாக ரிசர்வ் வங்கி தங்க பத்திரங்களை வெளியிடுகிறது. ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SHCIL), நியமிக்கப்பட்ட தபால் நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தை அமைப்புகளான நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் ஆகியவற்றின் மூலம் இந்த தங்க பத்திரங்கள் விற்கப்படும்.
இத்திட்டம் நவம்பர் 2015 இல், தங்கத்திற்கான தேவையைக் குறைப்பதற்கும், தங்கம் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் உள்நாட்டுச் சேமிப்பில் ஒரு பகுதியை நிதிச் சேமிப்பாக மாற்றுவதற்கும் என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தியா புல்லியன் அண்ட் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் லிமிடெட் மூலம் விற்பனை காலத்திற்கு முந்தைய வாரத்தின் கடைசி 3 வேலை நாட்களில் வெளியிடப்பட்ட 999 தூய்மையான தங்கத்தின் இறுதி விலையின் எளிய சராசரியின் அடிப்படையில், பத்திரத்தின் விலை இந்திய ரூபாயில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1 கிராம் அடிப்படை அலகு கொண்ட தங்கத்தின் கிராம் மடங்குகளில் பத்திரங்கள் கிடைக்கும். பத்திரத்தின் தவணைக்காலம் 8 வருட காலத்திற்கு, 5வது வருடத்திற்குப் பிறகு வெளியேறும் விருப்பத்துடன் அடுத்த வட்டி செலுத்தும் தேதிகளில் செயல்படுத்தப்படும்.
அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச முதலீடு 1 கிராம் தங்கம். தனிநபர்களுக்கான அதிகபட்ச சந்தா வரம்பு 4 கிலோ, HUF களுக்கு 4 கிலோ மற்றும் அறக்கட்டளைகள் மற்றும் அதுபோன்ற நிறுவனங்களுக்கு (ஏப்ரல்-மார்ச்) 20 கிலோ ஆகும்.
உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் (KYC) விதிமுறைகள் சாதாரண தங்கம் வாங்குவதற்கு உள்ளது போலவே இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil