2022 ஆம் ஆண்டில் நீங்கள் இறையாண்மை தங்கப் பத்திரத்தில் (எஸ்ஜிபி) முதலீடு செய்ய விரும்பினால், அடுத்த 15 நாள்களில் ஆண்டு முடிவடைவதற்கு இதுவே உங்களுக்கான கடைசி வாய்ப்பாக இருக்கும்.
இறையாண்மை தங்க பத்திரத்தில் (SGB) அடுத்த தவணையை அரசாங்கம் இந்த மாதம் தொடங்கப் போகிறது, இது டிசம்பர் 19 முதல் 23 டிசம்பர் 2023 வரை சந்தாவிற்காக திறக்கப்படும். வெளியிடும் தேதி டிசம்பர் 27, 2022 ஆகும்.
இந்திய ரிசர்வ் வங்கியுடன் (ஆர்பிஐ) கலந்தாலோசித்து, எஸ்ஜிபிகளை தவணையாக வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக டிசம்பர் 15 ஆம் தேதி ஒரு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே, SGB 2022-23 தொடர் IIIஆம் தவணை டிசம்பர் 19 அன்று சந்தாவுக்குத் திறக்கப்பட்டு டிசம்பர் 23 வரை கிடைக்கும். சந்தா காலத்தில் பத்திரத்தின் வெளியீட்டு விலை ரூ.5,409 ஆக இருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்த இந்திய அரசு, ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு வெளியீட்டு விலையில் இருந்து கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்க முடிவு செய்துள்ளது.
அத்தகைய முதலீட்டாளர்களுக்கு, தங்கப் பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராம் தங்கம் ரூ.5,359 ஆக இருக்கும்.
SBI மற்றும் HDFC வங்கி போன்ற திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் மூலம் SGB களின் அடுத்த தவணையை நீங்கள் வாங்க முடியும். எனினும், சிறு நிதி வங்கிகள், பேமெண்ட் வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் மூலம் SGB களை வாங்க முடியாது.
இறையாண்மை தங்கப் பத்திரங்களில் (SGB) முதலீடு செய்வதற்கு டிசம்பர் 19-டிசம்பர் 23ஆம் தேதியை நீங்கள் தவறவிட்டால், அடுத்த தவணை (SGB 2022-23 தொடர் IV) மார்ச் 14, 2023 வெளியீட்டுத் தேதியுடன் மார்ச் 6 முதல் மார்ச் 10 வரை சந்தாவுக்குக் கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/