sovereign-gold-bonds Scheme 2023-24 | தங்க இறையாண்மை பத்திரங்கள் 2023-24 தொடர்-IV முதலீடுக்காக பிப்.12ஆம் தேதி முதல் பிப்.16ஆம் தேதி திறந்திருக்கும். இந்தத் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்த பின்னர், இவை உங்களுக்கு 7 நாள்களுக்கு பின்னர் வழங்கப்படும்.
இந்தப் பணிகள் பிப்.21,2024 நடைபெறும். தற்போது, தங்க இறையாண்மை பத்திர முதலீட்டில் ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.6,263 ஆகும்.
முதலீடு காலம்
இந்தத் திட்டத்தில் முதலீடு காலம் 8 ஆண்டுகள் ஆகும். இதில் தனிநபர்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பம் 4 கிலோ வரையிலும், அரசில் பதிவுப் பெற்ற அறக்கட்டளை போன்ற அமைப்புகள் 20 கிலோ வரையிலும் முதலீடு செய்துக் கொள்ளலாம்.
மேலும், திட்டத்தில் 1 கிராம் தங்கம் முதல் வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் வாங்கும் தங்கத்துக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும்.
திட்டத்தின் நன்மைகள்
தங்கத்தின் உரிமையில் எந்த ஆபத்தும் இல்லை; சேமிப்பிற்கான செலவும் இல்லை.
மூலதன ஆதாய வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பத்திரத்தை மாற்றும்போது எந்தவொரு நபருக்கும் ஏற்படும் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு குறியீட்டு நன்மைகள் வழங்கப்படும்.
பத்திரங்கள் வெளியிடப்பட்ட பதினைந்து நாட்களுக்குள் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படும்.
இந்த முதலீடை எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் உள்ளிட்ட வங்கிகள் மூலமாக ஆன்லைனிலும் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“