Sovereign Gold Bond 2024 | sovereign-gold-bonds | reserve-bank-of-india | தங்க இறையாண்மை பத்திரத்தின் (எஸ்ஜிபி) தவணை பிப். 12ஆம் தேதி சந்தாவுக்கு திறக்கப்பட்டது. ஒரு கிராமின் விலை ரூ.6,263 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இறையாண்மை தங்கப் பத்திரத் திட்டம் 2023-24 - தொடர் IV 16 பிப்ரவரி 2024 வரை ஐந்து நாட்களுக்குச் சந்தாக்களுக்குத் திறந்திருக்கும்.
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் முதலீட்டாளர்கள் ஒரு கிராமுக்கு ரூ. 50 தள்ளுபடி பெறுவார்கள். இதனால், வெளியீட்டு விலை ரூ.6,213 ஆக குறைகிறது.
திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் மூலம் முதலீட்டாளர்கள் இந்த தங்கப் பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம்.
தொடர்ந்து, பிப்.21ஆம் தேதி முதலீட்டாளர்களுக்கு தங்கப் பத்திரங்கள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் 2.50 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
திட்டத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக, டிஜிட்டல் தங்கங்களை சேமிப்பதில் எந்தத் தொந்தரவும் இல்லை என்பதால் இந்தத் திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகின்றன.
இருப்பினும், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறைந்தால் இந்த முதலீடு பண அபாயங்களை உள்ளடக்கியது ஆகும்.
இந்தத் திட்டத்தில், தனிநபர்கள், இந்து பிரிக்கப்படாத குடும்பம் (HUF) அதிகபட்சமாக 4 கிலோ சந்தா வரம்புடன் முதலீடு செய்யலாம். அறக்கட்டளைகளுக்கு அதிகபட்சமாக 20 கிலோ சந்தா அனுமதிக்கப்படுகிறது.
கடந்த சந்தா, 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. அப்போது ஒரு கிராம் விலை ரூ.6,199 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Sovereign Gold Bond Scheme 2023-24: Check price, discount and last date for subscribing SGBs
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“